ஜோதிகாவுக்கு ஜோடியா அந்த நடிகரை நடிக்க வச்சது என்னோட தப்பு தான்.. பல வருடம் கழித்து வருத்தம் தெரிவித்த கௌதம் மேனன்..!

By Nanthini on ஆடி 2, 2025

Spread the love

மின்னலே திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர்தான் கௌதம் மேனன். இந்த திரைப்படம் வெற்றியடைந்த நிலையில் இரண்டாவது படமாக காக்க காக்க பணத்தை இயக்கினார். முதல் படத்தை தயாரிப்பாளருக்கு எடுத்துக் கொடுத்த கௌதம் மேனன் காக்க காக்க படத்தை தனது ஸ்டைலில் இயக்கியிருந்தார். ஏனென்றால் அந்த திரைப்படத்தில் அவரும் ஒரு தயாரிப்பாளராக இருந்தார். நந்தா திரைப்படத்தை பார்த்துவிட்டு சூர்யாவை அந்தப் படத்தில் நடிக்க வைத்தார். காக்க காக்க படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ஜோதிகா நடித்திருந்த நிலையில் இருவருக்கும் இடையே இருந்த கெமிஸ்ட்ரி படத்தின் வெற்றிக்கு பெரிதும் உதவியாக இருந்தது.

மீண்டும் வில்லன் அவதாரமெடுக்கும் கௌதம் மேனன் - மின்னம்பலம்

   

இந்த படம் மூலமாக ஸ்டைலிஷ் இயக்குனராக கௌதம் மேனன் மாறினார். கமலை வைத்து வேட்டையாடு விளையாடு திரைப்படத்தை கொடுத்தார். இந்தப் படத்தின் பாடல்களும் படமும் சூப்பர் ஹிட் அடித்தது. அதன் பிறகு தொடர்ந்து பல படங்களை கௌதம் மேனன் இயக்கினார். ஆனால் பெரிய அளவில் ஹிட்டான படத்தை கொடுக்க முடியவில்லை. சிம்புவை வைத்து விண்ணைத்தாண்டி வருவாயா படம் மட்டுமே ஹிட் அடித்தது. அதன் பிறகு இயக்கிய படங்கள் அந்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. அதே சமயம் விக்ரமை வைத்து இயக்கிய துருவ நட்சத்திரம் படமும் இதுவரை வெளியாகாமல் உள்ளது. கடனை அடைப்பதற்காக கௌதம் மேனன் சினிமாவில் நடிக்க தொடங்கினார்.

   

 

இதுவரை பல படங்களில் நடித்து விட்டார். இதனிடையே சரத்குமார் மற்றும் ஜோதிகாவை வைத்து கௌதமேனன் இயக்கிய படம் தான் பச்சைக்கிளி முத்துச்சரம். கடந்த 2007 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படம் தோல்வியடைந்தது. இப்படியான நிலையில் சமீபத்திய பேட்டியில் இப்படம் குறித்து பேசி உள்ள கௌதம் மேனன், பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் சேரனை நடிக்க வைப்பதே என் விருப்பமாக இருந்தது. அவரிடம் கதை சொன்னபோது மூன்று மாதங்கள் காத்திருக்க முடியுமா என கேட்டார். இந்த படத்தை முடித்துவிட்டு ஜோதிகா திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருந்தார். அதனால் சரத்குமாரை வைத்து அந்த படத்தை இயக்கினேன். அது ஏன் தப்பான சாய்ஸ். நான் அதிக டைம் எடுக்கிறேன். அதிக செலவு பண்றேன் என சொல்கிறார்கள். அந்தப் படத்தை நான் மிகவும் குறைவான நாட்களில் எடுத்தேன். அந்தப் படம் ஓடவில்லை என்று கௌதம் மேனன் வருத்தத்துடன் கூறியுள்ளார்.