அடடே சூப்பர் நியூஸ்..! வடசென்னையிலும் ரூ.8 கோடி செலவில் வருகிறது… தமிழக அரசு அதிரடி..!!

By Soundarya on ஆடி 2, 2025

Spread the love

தமிழக மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு திமுக அரசானது பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் குளிர்சாதன வசதியோடு பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுடைய பயன்பாட்டிற்கு  வந்துள்ளது. இதனை தொடர்ந்து மேலும் சில இடங்களில் அமைக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. பயணிகளுக்கு குளிர்ச்சியான சூழ்நிலை கிடைக்கும் விதமாக குளிரூட்டும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது.

நவீன வசதிகளான இருக்கைகள், சார்ஜிங் பாயிண்ட் மற்றும் பிற வசதிகளும் இதில் அமைக்கப்படுகிறது. இந்த நிலையில் வடசென்னையில் 8 கோடி மதிப்பில் குளிர்சாத வசதியுடன் கூடிய நான்கு பேருந்து நிறுத்தங்களை அமைப்பதற்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் டெண்டர் கோரி உள்ளது. அதன்படி பெரம்பூர், கொளத்தூர், ராயபுரம் , துறைமுகம் பகுதிகளில்  ஏசி பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்படுகிறது.