கதை எழுதுறப்போ இந்த ரொமான்ஸ் எங்க ? லோகேஷை கலாய்த்து தள்ளிய நடிகை ஆன்ட்ரியா

By Deepika

Published on:

நடிகர் அரசியலுக்கு வருவது, இசையமைப்பாளர்கள் நடிகர்களாக மாறுவது, இயக்குனர்கள் இசையமைப்பது என தொடர்ந்து நடந்து வருகிறது. இதன் வரிசையில் புதிதாக இணைந்திருப்பவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். மாநகரம், கைது, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற பல ஆக்சன் மூவிகளை கொடுத்த இயக்குனர் லோகேஷ் நடிகராக அவதாரம் எடுத்துள்ளார்.

Lokesh kanagraj and shruti haasan

கமலின் ராஜ்கமல் தயாரிப்பில் ஸ்ருதிஹாசன் பாடியுள்ள ஆல்பமில் ஸ்ருதியுடன் சேர்ந்து நடித்துள்ளார் இயக்குனர் லோகேஷ். லோகேஷ் பொதுவாக அவர் படங்களில் காதல் காட்சிகளே வைக்க மாட்டார். அப்படி ஜோடிகளை காண்பித்தாலும் அவர்களில் ஒருவரை படத்தில் கொன்று விடுவார். ஏன் காதல் காட்சிகள் உங்கள் படத்தில் இல்லை என கேட்டால் அது எனக்கு வராது என ஒரு பேட்டியில் கூறி இருந்தார்.

   
Lokesh kanagraj and shruti haasan

இந்தநிலையில், ஸ்ருதியுடன் இனிமேல் ஆல்பம் வீடியோவில் ரொமான்ஸ் காட்சிகளில் நடித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி உள்ளார். ரசிகர்கள் மட்டுமல்ல பல பிரபலங்களும் அதிர்ச்சியில் தான் இருக்கிறார்கள். அதில் லோகேஷ் இயக்கத்தில் நடித்த ஆன்ட்ரியாவும் ஒருவர். ஆன்ட்ரியா, கா தி பாரஸ்ட் என்ற படத்தில் ஆன்ட்ரியா நடித்துள்ளார் அதன் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவரிடம் லோகேஷின் ரொமான்ஸ் குறித்து கேட்கப்பட்டது.

andrea mocks lokesh kanagaraj

இதற்கு பதிலளித்த ஆன்ட்ரியா, நான் இதை எதிர்பார்க்கவில்லை. கதை எழுதும்போது இந்த ரொமான்ஸ் எங்கே போனது என கூறி சிரித்தார். மேலும், நான் சொல்லவில்லை, கமெண்ட் பார்த்தேன் பலர் இப்படி தான் சொல்லி இருந்தார்கள். நான் இன்னும் அந்த வீடியோ பார்க்கவில்லை, ஆனால் சின்ன சின்ன க்ளிப்ஸ் மட்டும் பார்த்தேன் என கூறியுள்ளார் ஆன்ட்ரியா.

 

author avatar
Deepika