பாமக கட்சியில் தலைவர் பதவி தொடர்பாக ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனால் அன்புமணி ஆதரவாளர்களை பதவிகளில் இருந்து ராமதாஸ் நீக்கி அதிர்ச்சி கொடுத்து வருகிறார். கட்சி நிர்வாகிகளை நியமிப்பது மற்றும் நீக்குவது தொடர்பாக இருவரும் தனித்தனியாக முடிவுகள் எடுத்து வருவதால் இது கட்சிக்குள் உட்கட்சிப் பூசலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாமக எம்எல்ஏ அருளைக் கட்சிப் பொறுப்பில் இருந்து பாமக தலைவர் அன்புமணி நீக்கி உள்ளார்.
இதனையடுத்து சேலம் மாநகர மாவட்ட செயலாளராக சரவணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார் . பாமக மாநில இணை பொது செயலாளராக அருளை இன்று ராமதாஸ் நியமித்திருந்த நிலையில் இருந்து கட்சி பொறுப்பில் இருந்து நீக்கியுள்ளார் அன்புமணி. இந்நிலையில் கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கவும், நியமிக்கவும் பாமக நிறுவனர் ராமதாஸ்-க்கு மட்டுமே அதிகாரம் என்று அருள் கூறியுள்ளார்.
