நம்ப தமிழ்நாட்டுல இப்படி ஒரு அழகிய தீவு இருக்கா?… இனி குடும்பத்தோட எங்க போயிட்டு வாங்க.. ட்ரெண்டிங்கில் இருக்கும் கூமாப்பட்டி கிராமத்தின் ஸ்பெஷல்..!

By Nanthini on ஆனி 26, 2025

Spread the love

இன்றைய காலகட்டத்தில் உலகில் என்ன நடந்தாலும் நாம் எளிதில் செல்போன் மூலமாகவே தெரிந்து கொள்கிறோம். அதேசமயம் இளைஞர்கள் மத்தியில் instagram பயன்பாடு என்பது அதிகமாகி விட்டதால் அதில் ரீல்ஸ் பார்ப்பது பலருக்கு டைம் பாஸ் ஆக உள்ளது. அதில் ஏதாவது வித்தியாசமாக தோன்றினால் அதனை பலரும் டிரெண்டிங் செய்து விடுகிறார்கள். அதன்படி கடந்த சில நாட்களாகவே இன்ஸ்டாகிராமில் மிகவும் ட்ரெண்டிங்காக சென்று கொண்டிருக்கும் ஒரு இடம் தான் கூமாபட்டி. உங்களுக்கு டென்ஷனா இருந்தாலும் சரி, வேற எந்த பிரச்சனையா இருந்தாலும் சரி இங்க வாங்க, கூமாபட்டி தனி தீவு என்று சொல்லி ஒருவர் போட்ட இன்ஸ்டாகிராம் வீடியோ தான் தற்போது வைரலாகி கொண்டிருக்கிறது.

இன்ஸ்டா மூலம் இணையத்தில் ட்ரெண்டாகும் கூமாப்பட்டி / Koomapatti is trending on the internet through Instagram

   

விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது தான் இந்த கூமாபட்டி கிராமம். மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள அழகிய இயற்கை எழில் கொஞ்சும் கிராமம் தான் இது. ஒரு பக்கம் மேற்கு தொடர்ச்சி மலை, மறுபக்கம் விவசாய நிலம் என இயற்கையின் சொர்க பூமி ஆக இருக்கும் இந்த கிராமத்தை ஃபேமஸ் ஆக்கிய பெருமை அந்த ஊரை சேர்ந்த இன்ஸ்ட்டா இன்ஃப்ளுயன்சரை தான் சேரும். அவர் தன் பெயரைக் கூட வீடியோவில் சொல்லவில்லை. ஆனால் தன்னுடைய வீடியோவில் அந்த கூமாபட்டி பெயரை தான் இடைவிடாமல் சொல்வார். தற்போது இணையத்தில் இந்த கிராமத்தை தான் அதிக அளவு தேடிக்கொண்டிருக்கின்றன.

   

ஏங்க, கூமாபட்டி வாங்க'... தமிழ்நாட்டின் அழகிய தீவு? இணையத்தில் வைரலாகும் கூமாபட்டி எங்கு இருக்கு?

 

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு என்ற ஊருக்கு அருகில் இந்த கிராமம் அமைந்துள்ளது. இன்னும் எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் புகழ்பெற்ற ஆண்டாள் கோவில் அமைந்துள்ள ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் தான் இந்த கிராமம் அமைந்துள்ளது. தற்போது இந்த கிராமத்திற்கு ஏராளமானோர் படையெடுக்க தொடங்கிவிட்டனர். இனிவரும் நாட்களில் அந்த ஊர் சுற்றுலாத்தலமாக கூட மாற வாய்ப்புள்ளது. கூமாபட்டி அருகில் தான் பிளவக்கல் அணையும் அமைந்துள்ளது. அதன் அருகிலேயே ஒரு பூங்காவும் உள்ளது. தற்போது இந்த கிராமம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

 

 

Instagram இல் இந்தப் பதிவைக் காண்க

 

JP. gold பதிவைப் பகிர்ந்துள்ளார் (@dark_night_tn84)