பிரதீப்புக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்ல… ஸ்ரீகாந்தோடு மட்டும் தான்… நடிகர் கிருஷ்ணா அளித்த வாக்குமூலம்..!!

By Soundarya on ஆனி 25, 2025

Spread the love

போதைப்பொருள் வழக்கத்தில் நடிகர் ஸ்ரீகாந்தை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய நிலையில் தற்போது அவர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து போதைப்பொருள் விவகாரத்தில் கழுகு படத்தில் நடித்து பிரபலமான நடிகர் கிருஷ்ணாவுக்கும் தொடர்பு உள்ளது தெரிய வந்தது. அவருடைய பணப்பரிவர்த்தனை மற்றும் செல்போன் தொடர்புகளை வைத்து கிருஷ்ணாவை விசாரிக்க திட்டமிட்டனர். வழக்கு குறித்து விசாரணை நடத்த கிருஷ்ணாவை தொடர்பு கொண்ட போது அவரது செல்போன் ஸ்விச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து கிருஷ்ணா விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என சமன் அனுப்பப்பட்டது. கேரளாவிற்கு தப்பி சென்றதாக தகவல் வெளியானது. அவரை பிடிப்பதற்காக ஐந்து தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வந்தனர்.

இப்படியான நிலையில் போலீசில் சிக்கியுள்ள கிருஷ்ணாவிடம் துருவி துருவி போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியானால் அவர் கைது செய்யப்படுவார். இந்நிலையில் அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், ” எனக்கு இரைப்பை அலர்ஜி இருப்பதால் போதை பொருள் பயன்படுத்துவதற்கு வாய்ப்பே இல்லை. இதய துடிப்பு வேகமாக இருப்பதால் அது தொடர்பாக சிகிச்சை எடுத்து வருகிறேன்.

   

பிரதீப் குமாருக்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. ஸ்ரீகாந்த் உடன் மட்டுமே நட்போடு பழகுவேன். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத்திடமிருந்து நான் போதை பொருள் வாங்கி செல்வதாக தவறாக தெரிவித்துள்ளார் பிரதீப்” என்று கூறியுள்ளார் . இதனை அடுத்து மருத்துவ பரிசோதனை முடிவின் அடிப்படையில் நடிகர் கிருஷ்ணா மீது அடுத்த கட்ட சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.