2026 ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அரசியல் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. பல கட்சிகளும் தங்களுடைய வலிமையை உறுதிப்படுத்த புதிய முகங்களை அணுகும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் அன்புமணி, தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை பாஜக மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தலுக்கு இன்னும் ஐந்து மாதங்களே உள்ள நிலையில் NDA கூட்டணிக்கு கூடுதல் கட்சிகளை அழைத்து வர பாஜக வியூகம் அமைத்து வருகிறது. இன்று பைஜயந்த் பாண்டா தலைமையில் பாஜகவின் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதில் அன்புமணி, தேமுதிகவுடன் கூட்டணியை உறுதி செய்வதற்கான பணிகளை மேற்கொள்ள நிர்வாகிகளுக்கு உத்தரவிடப்படும் என்று கூறப்படுகிறது.
