சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 2026 ஐபிஎல் சீசனுக்காக பெரிய மாற்றத்துக்குத் தயாராகி வருகிறதாம். 2025 சீசனில் அணிக்கு ஏற்பட்ட மோசமான நிலை புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் முடித்தது காரணமாக, புதிய வீரர்களை சேர்க்கும் முயற்சியில் அவர்கள் தீவிரமாக உள்ளனர். இதன் ஒரு பகுதியாக, சிஎஸ்கே அணிக்கு வாஷிங்டன் சுந்தரை விட்டுக் கொடுக்க குஜராத் டைட்டன்ஸ் மறுத்திருப்பதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.
வாஷிங்டன் சுந்தரின் ஏழத் தொகையான 3.2 கோடிக்கு அவரை குஜராத் டைட்டன்ஸ் பணியிடம் இருந்து சிஎஸ்கே டிரேட் செய்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் குஜராத் டைட்டன்ஸ் பயிற்சியாளர் ஆசிஷ் நேஹரா வாஷிங்டன் சுந்தரை டிரேட் செய்ய மறுத்துள்ளார். இதனால் அஸ்வினின் இடத்தில் புதிய ஆல் ரவுண்டரை ஏலத்தில் வாங்க சி எஸ் கே திட்டமிட்டுள்ளதாம்.
