இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. அதன்படி தற்போது பிஎஸ்என்எல் தனது வாடிக்கையாளர்களுக்காக புதிய சம்மன் பிளானை அறிமுகம் செய்துள்ளது. அதில் 1812 ரூபாய் க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு வருடத்திற்கு தினமும் 2ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் கால் ஆகியவற்றை பெறலாம்.
முக்கிய அம்சமாக இந்த திட்டத்தில் BiTV பிரீமியம் சப்ஸ்கிரிப்சனை ஆறு மாதத்திற்கு இலவசமாக பெறலாம். இந்த புதிய ஆஃபர் நவம்பர் 18ஆம் தேதி வரை மட்டுமே அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
