திமுக அரசு கடந்த தேர்தலில் வழங்கிய வாக்குறுதிகளில் 99 சதவீதத்தை நிறைவேற்றிவிட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் கூறியது முற்றிலும் பொய்யானது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். அரசு ஊழியர்களுக்காக அறிவிக்கப்பட்ட 10 முக்கிய வாக்குறுதிகளில், இறப்பு நிதி உயர்வை தவிர மற்ற எதையுமே இந்த அரசு செய்யவில்லை. குறிப்பாக, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தாமல் ‘உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்’ என்ற பெயரில் ஒரு ஏமாற்று வேலையை அரசு செய்வதாகவும், இதனை எதிர்த்து ஊழியர்கள் போராடி வருவதையும் சுட்டி காட்டியுள்ளார்.
சம வேலைக்கு சம ஊதியம் கோரி ஆசிரியர்கள் போராடுவதையும், சத்துணவு ஊழியர்களின் கோரிக்கைகள் கண்டுகொள்ளப்படாமல் இருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ள அன்புமணி, சட்டமன்றம் போன்ற புனிதமான இடத்தில் உண்மையை மட்டுமே பேச வேண்டும் என கூறியுள்ளார். திமுக ஆதரவு அமைப்புகளை வைத்து இனிப்பு ஊட்டச் செய்து நாடகமாடுவதால் உண்மைகளை மறைக்க முடியாது என்று விமர்சித்துள்ளார். மேலும் சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் இடஒதுக்கீடு விவகாரங்களிலும் அரசு இரட்டை வேடம் போடுவதாகவும், இதற்கு வரும் தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் அன்புமணி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே மனைவியின் முன்னாள் காதலனுடன் ஏற்பட்ட கள்ளக்காதல் தகராறில், இருவரையும் சமாதானம் செய்யச் சென்ற நண்பர்…
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அகில் குமார் சந்தக் என்பவர், கடந்த 2019-ஆம் ஆண்டு டெல்லியில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த நூர்ஷிகா…
கேரள மாநிலம் கொச்சி பொன்னுருன்னி பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் பிரபல மலையாள நடிகை அதுல்யா சந்திரா, 41…
நீலகிரி மாவட்டம் பில்லூர்மட்டம் சடையன் கொம்பை பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் திடீரென காணாமல் போனதாக கடந்த…
டெல்லி அரசுப் பேருந்து ஓட்டுநரிடம் வழித்தடம் பற்றிக் கேட்ட பெண் ஒருவர், திடீரென ஓட்டுநருடன் தகராறில் ஈடுபட்டு அவரது காலரைப்…
சென்னையை அடுத்த கொளத்தூர் ஜி.கே.எம் காலனி பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபான கூடத்தில், அண்ணன் மற்றும் தங்கை இருவரும் மதுபோதையில்…