முதல்வரே…! மனசாட்சி இல்லாம பொய் பேசாதீங்க… அது ஒன்றை தவிர திமுக அரசு எதுவுமே செய்யல… போட்டு தாக்கிய அன்புமணி…!!

By Devi Ramu on தை 23, 2026

Spread the love

திமுக அரசு கடந்த தேர்தலில் வழங்கிய வாக்குறுதிகளில் 99 சதவீதத்தை நிறைவேற்றிவிட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் கூறியது முற்றிலும் பொய்யானது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். அரசு ஊழியர்களுக்காக அறிவிக்கப்பட்ட 10 முக்கிய வாக்குறுதிகளில், இறப்பு நிதி உயர்வை தவிர மற்ற எதையுமே இந்த அரசு செய்யவில்லை. குறிப்பாக, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தாமல் ‘உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்’ என்ற பெயரில் ஒரு ஏமாற்று வேலையை அரசு செய்வதாகவும், இதனை எதிர்த்து ஊழியர்கள் போராடி வருவதையும்  சுட்டி காட்டியுள்ளார்.

சம வேலைக்கு சம ஊதியம் கோரி ஆசிரியர்கள் போராடுவதையும், சத்துணவு ஊழியர்களின் கோரிக்கைகள் கண்டுகொள்ளப்படாமல் இருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ள அன்புமணி, சட்டமன்றம் போன்ற புனிதமான இடத்தில் உண்மையை மட்டுமே பேச வேண்டும் என கூறியுள்ளார். திமுக ஆதரவு அமைப்புகளை வைத்து இனிப்பு ஊட்டச் செய்து நாடகமாடுவதால் உண்மைகளை மறைக்க முடியாது என்று விமர்சித்துள்ளார். மேலும் சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் இடஒதுக்கீடு விவகாரங்களிலும் அரசு இரட்டை வேடம் போடுவதாகவும், இதற்கு வரும் தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் அன்புமணி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.