தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க மறுப்பக்கம் தொகுதி பங்கீடு என்பது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக இடையே தான் போட்டி என்ற காலம் போய் தற்போது விஜய்யும் களத்தில் இறங்கியுள்ளார். சமீபத்தில் தான் இவர் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். ஒவ்வொரு வாரமும் விடுமுறை நாளான சனிக்கிழமைகளில் தேர்தல் பிரச்சாரத்தை நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார்.
அதன்படி வருகின்ற செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் பிரச்சாரம் மேற்கொள்வதற்கு விஜய் அனுமதி கேட்டிருந்தார். அதே நாளில் அன்புமணியும் தன்னுடைய நடைபயணத்திற்கு அனுமதி கோரியதால் விஜய்க்கு சிக்கல் எழுந்தது. இதனை அறிந்த அன்பு மனைவி தன்னுடைய பயணத்தை செப்டம்பர் 28ஆம் தேதிக்கு மாற்றி விஜய்க்கு உதவி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாமக தரப்பில் இதுவரை கூட்டணி குறித்து அறிவிக்கப்படாத நிலையில் அன்புமணியின் இந்த அணுகுமுறை அரசியல் களத்தில் பேசு பொருளாகியுள்ளது.
