கூடுதல் சீட்… திமுக கூட்டணியில் இருந்து விலகுகிறதா காங்கிரஸ்?… செல்வப்பெருந்தகை பரபரப்பு பேட்டி….!

By Nanthini on புரட்டாதி 24, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க மறுப்பக்கம் தொகுதி பங்கீடு என்பது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் இருக்கக்கூடிய பெரிய கட்சிகள் அனைத்தும் தொகுதி பங்கீடு குறித்து பேசி வருகின்றன.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் சீட்டுகள் கேட்பதால் திமுக கூட்டணிக்குள் எந்த சலசலப்பு வராது என்று செல்வ பெருந்தகை தெரிவித்துள்ளார். தமிழக வெற்றி கழகம் கட்சியுடன் கூட்டணி குறித்து காங்கிரஸ் மறைமுகமாக எதுவும் பேசவில்லை என்றும் இந்தியா கூட்டணியில் எந்த மாற்றமும் வராது என்றும் திட்டவட்டமாக அவர் கூறியுள்ளார். விஜய் பேசுவதற்கு காவல்துறை அனுமதி கொடுத்தால்தான் அவர் என்ன பேசுகிறார் என தெரியவரும் என்றும் குறிப்பிட்டார்.