ரூ. 100 கோடி லஞ்சப் புகார்…. தனியார் பள்ளி அனுமதி வழக்கில் சிக்கும் அன்பில் மகேஷ்?… கோபத்தின் உச்சிக்கே சென்ற ஸ்டாலின்…. பரபரக்கும் அரசியல் களம்….!

By Nanthini on புரட்டாதி 16, 2026

Spread the love

முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்குச் சொந்தமான மற்றும் தொடர்புடைய இடங்களில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் இன்று அதிகாலை முதல் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி தென்னூர் அண்ணா நகரில் உள்ள அவரது இல்லம், சென்னை அலுவலகம் உட்பட மொத்தம் ஆறு இடங்களில் ஒரே நேரத்தில் இந்த தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதி வழங்குவதில் பல கோடிகளில் முறைகேடு மற்றும் லஞ்சப் பணம் பரிமாறப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்தே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஏற்கனவே தனியார் பள்ளிகள் சங்க முறைகேடு வழக்கில் சிலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அதன் நிதிப் பரிமாற்றங்களை ஆய்வு செய்வதற்காகவே இச்சோதனை நடத்தப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் அதிகாரிகள் முக்கிய ஆவணங்களை தீவிரமாக ஆய்வு செய்து, அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். காலை முதலே இச்சோதனை நடைபெற்று வருவதால், அன்பில் மகேஷின் இல்லத்தின் முன்பாக திமுக தொண்டர்களும் பொதுமக்களும் திரண்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பலத்த காவல்துறை பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

   

இச்சோதனைக்குத் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது முற்றிலும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும், அரசின் தோல்விகளை மறைக்க மேற்கொள்ளப்படும் திசைதிருப்பல் தந்திரம் என்றும் அவர் சாடியுள்ளார். மாநிலத்தில் நிலவும் மின்வெட்டு, பட்டினப்பாக்கம் மீனவர் போராட்டம், ஆவின் பால் தட்டுப்பாடு மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகளில் இருந்து மக்களின் கவனத்தை மாற்றவே இத்தகைய நாடகங்கள் நடத்தப்படுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

   

மத்திய குற்றப்பிரிவு காவல்துறையின் இந்த திடீர் நடவடிக்கையும், அதற்கெதிரான அரசியல் எதிர்வினைகளும் தமிழக அரசியலில் பெரும் சூட்டைப் கிளப்பியுள்ளன. இத்தகைய பொய்யான குற்றச்சாட்டுகளையும் அடாவடி நடவடிக்கைகளையும் சட்டப்பூர்வமாக எதிர்கொள்வோம் என எதிர்க்கட்சித் தரப்பு உறுதியாகத் தெரிவித்துள்ளது. தனியார் பள்ளி அனுமதி முறைகேடு வழக்கில் காவல்துறையின் அடுத்தகட்ட விசாரணை எந்த திசையில் நகரப் போகிறது என்பதே தற்போது அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.