“சினிமா பாணியில் ருத்திரதாண்டவம்…” கையில் கோடரியுடன் கலெக்டர் ஆபீசுக்கு வந்த நபர்… பதறிய அதிகாரிகள்…. சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் வீடியோ…!!

By Devi Ramu on புரட்டாதி 16, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள், ஒல்லியான தோற்றம் கொண்ட நபர் ஒருவர் கையில் கூர்மையான கோடரியை ஏந்தியபடி திடீரென நுழைந்ததால் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

அங்கிருந்த அதிகாரிகளும் பொதுமக்களும் அச்சமடைந்த நிலையில், அந்த நபர் திடீரெனத் தேசபக்தி உணர்ச்சியோடு பேசத் தொடங்கினார். “அரசு அலுவலகங்களில் மலிந்து கிடக்கும் ஊழலுக்கு எதிராகவே நான் இந்தக் கோடரியைக் கையில் ஏந்தியிருக்கிறேன். நான் மாவீரன் மகாராணா பிரதாப்பின் உண்மையான வம்சாவளி!” என்று முழக்கமிட்டு ஆவேசப்பட்டார்.

   

அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்காமல் பணிகள் நடப்பதில்லை என்ற ஆத்திரத்தில் அவர் இந்த காரியத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. “ஊழலுக்கு எதிரான குரல் சரிதான், ஆனால் கோடரியைத் தூக்கினால் வேலை நடக்குமா?” என்றும், “சினிமா பாணியில் அதிரடி காட்டுகிறார்” என்றும் நெட்டிசன்கள் இந்தச் சம்பவத்தை விவாதித்து வருகின்றனர்.