ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி மற்றும் நீடா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சன்ட்-க்கும் வரும் ஜூலை 12ஆம் தேதி மும்பையில் திருமணம் நடைபெற உள்ளது. இந்த பிரமாண்ட திருமண விழாவிற்கு முன்னதாக, குஜராத் மாநிலம் ஜாம்நகரில் திருமணத்திற்கு முந்தைய மூன்று நாள் கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது.
மார்ச் 1 முதல் 3 வரை நடைபெறும் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களில் வணிக மற்றும் தொழில்நுட்ப உலகின் முன்னணி பிரமுகர்களும் கலந்துகொள்ள உள்ளனர். பாலிவுட் பிரபலங்கள் அமிதாப் பச்சன், ஷாருக்கான், கிரிக்கெட் ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர் மற்றும் எம்எஸ் தோனி ஆகியோர் திருமண விழாவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
#image_title
இந்நிலையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றுவரும் ஆனந்த்-ராதிகா திருமண கொண்டாட்டத்தில், மணமகனான ஆனந்த் அம்பானி தனது பெற்றோர் மற்றும் குழந்தைப் பருவத்தைப் பற்றிய பல விஷயங்களை எமோஷனலாக பகிர்ந்து கொண்டுள்ளார். இதுபற்றி அவர் கூறும் பொழுது ‘எனது குழந்தைப் பருவம் பூக்களின் படுக்கை அல்ல. முட்களின் வலியை நானும் அனுபவித்திருக்கிறேன்.
நான் பல உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொண்டேன், இந்த விடயத்தில் என் அப்பாவும் அம்மாவும் எனக்கு ஆதரவாக நின்றார்கள்’ என்று கூறினார். இதுமட்டுமின்றி இன்னும் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். மகனின் இந்த வார்த்தைகளை கேட்ட தந்தை முகேஷ் அம்பானி கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் விட்டு அழுதார். இதோ அந்த வீடியோ…