பரதநாட்டிய கலைஞர் to பிஸ்னஸ் woman.. அம்பானி குடும்பத்திற்கு மருமகளாக வரப்போகும் ‘ராதிகா’ யார் தெரியுமா..?

By Ranjith Kumar on பங்குனி 3, 2024

Spread the love

முகேஷ் அம்பானியின் மகனான ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் இவர்களின் நிச்சைதார்த்தம் தான் தற்போது வைரலாகி வருகிறது. ராதிகா மெச்சன் அவர்களின் கனிவான குணத்தை கண்டு பொதுமக்களும் குடும்பத்தாரும், நண்பர்களும், பல தொழிலதிபர்களும், பிரபல நடிகர்களும் அவருக்கு ஆசி வழங்கி வருகிறார்கள். என்.கார் ஹெல்த் கேர் நிறுவனம் மற்றும் பல நிறுவனங்களை நடத்தி வரும் வீரென் மெர்ச்சன்ட் , சைலா வீரென் மெர்ச்சன்ட் இவர்களின் மகளான ராதிகா மெட்சன்ட் அவர்கள்,

நியூயார்க்கில் உள்ள பல்கலைக்கழகத்தில் அரசியல், பொருளாதார படிப்பை முடித்துவிட்டு தற்போது ரியல் எஸ்டேட் தொழில் ஒன்று ஆரம்பித்த தன் சொந்த காலில் நின்று வருகிறார். இவர் எட்டு வருட காலமாக பரதநாட்டியம் கலையில் மிகவும் பேர் பெற்றவர். பல விருதுகளையும் வாங்கி உள்ளார். ராதிகாவும் அனில் அம்பானி மகனான அனந்தும் பல வருடங்களாக நண்பர்களாக இருந்து தற்போது காதலராக மாறி கல்யாணம் செய்ய உள்ளார்கள். இவர்கள் நண்பராக இருந்த காலகட்டத்தில் அம்பானி வீட்டில் எந்த நிகழ்வு நடந்தாலும் அனந்துடன் ராதிகா எப்பொழுதும் இருப்பாராம், இதை கண்ட பலரும் இவர்கள் இருவரும் சேர்ந்து இருப்பதைப் பார்த்த போதே இவர்கள் நிச்சயமாக கல்யாணம் செய்து கொள்வார்கள் என்று நினைத்தபடி தற்போது இரு வீட்டார் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

   

குஜராத்தில் உள்ள அம்பானிக்கு சொந்தமான மாபெரும் கோட்டையில் வைத்து தான் இந்த நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதில் உலக பணக்காரர்கள், உலகப் புகழ்பெற்ற நடிகர்கள், மிகப்பெரிய மியூசிக் ஜாம்பவான்கள் என்று பலரும் இந்த நிகழ்விற்கு வருகை தந்துள்ளார்கள். அது மட்டும் இல்லாமல் 50000 மக்களுக்கு கணக்கில் அடங்காத உணவுகளை வழங்கியுள்ளார்கள். அந்த நிகழ்வின் போது ராதிகா அவர்கள் மக்களிடம் மிக அன்பாகவும் பண்பாகவும் பணிவாகவும் நடந்து கொண்டுள்ளார்கள். அங்கு வந்துள்ள கீழ் மட்டத்திலிருந்து மேல்மட்ட மக்கள் வரையும் அனைவரிடமும் மிக கணிசமாக பேசி புன்னகைத்து வரவேற்றுள்ளார்கள். நண்பர்கள் மற்றும் குடும்பத்தாளர்கள் வருகை தந்துள்ள மிகப்பெரிய ஜாம்பவான்கள் எல்லாரிடமும் தன் அன்பான பேச்சை பேசி எல்லாரையும் கவர்ந்து இழுத்து உள்ளார்.

   

அங்குள்ள அனைவரும் ராதிகாவின் கனிவான நடவடிக்கையை பார்த்து தான் பெருமிதம் கொள்கிறார்கள். இதைப்பற்றி அனந்த அவர்கள் ஒரு நிகழ்சியில் கூறியுள்ளார், அதாவது நான் மிக ஒல்லியாக பிட்டாக இருந்த போதிலும் என்னை காதலித்தார், ஆனால் தற்போது நான் பருமனாகி உடல் எடை போட்ட பின்பும் என்னை முதல் முதலில் என்னை எப்படி காதலித்தாரோ அதேபோல் இப்ப வரையும் காதலித்துக் கொண்டிருக்கிறார். இவர் மிகவும் கணிசமான ஒரு பெண் என்று ராதிகாவை பாராட்டியுள்ளார். அதேபோல் தான் இப்பொழுது தன் கணவருக்கும் சரி தன் அப்பா அம்மாவுக்கும் சரி நல்ல பெயரை வாங்கிக் கொடுத்திருக்கிறார் ராதிகா மெச்சன்ட்.