200 ஆண்டுகால காத்திருப்புக்கு விடிவுகாலம்… முகேஷ் அம்பானி வழியில் மகன் செய்த மாபெரும் உதவி… கேரள கோயில்களுக்கு கிடைத்த மெகா கிப்ட்… குவியும் பாராட்டுக்கள்…!!!

By Rajeshwari on சித்திரை 8, 2026

Spread the love

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் மகன் அனந்த் அம்பானி, கேரளாவில் உள்ள புகழ்பெற்ற ஆன்மீகத் தலங்களான குருவாயூர் மற்றும் ராஜராஜேஸ்வரம் ஆகிய கோயில்களின் மேம்பாட்டிற்காக சுமார் 15 கோடி ரூபாய்க்கு மேல் நன்கொடை வழங்கியுள்ளார். ராஜராஜேஸ்வரம் கோயிலுக்குச் சென்ற அவர், முதற்கட்டமாக 3 கோடி ரூபாய் வழங்கியதுடன், சுமார் இரண்டு நூற்றாண்டுகளாகப் புனரமைக்கப்படாமல் இருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கிழக்கு கோபுரத்தை முழுமையாகச் சீரமைக்க 12 கோடி ரூபாய் நிதியுதவி அளிப்பதாக உறுதியளித்துள்ளார்.

மேலும் கோயிலின் பாரம்பரியம் மற்றும் கட்டிடக்கலை அழகைப் பாதுகாக்கும் நோக்கில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதேபோல், குருவாயூரப்பன் கோயிலுக்குச் சென்ற அனந்த் அம்பானி, அங்குள்ள தேவஸ்வம் வாரியத்திற்கு 3 கோடி ரூபாய் நன்கொடை அளித்தார்.

   

இது குறிப்பாக, விலங்குகள் நலனில் அதிக ஆர்வம் கொண்ட அவர், குருவாயூர் கோயிலைச் சேர்ந்த யானைகளைப் பராமரிப்பதற்கும், அவற்றிற்கென நவீன வசதிகளுடன் கூடிய பிரத்யேக மருத்துவமனை மற்றும் சங்கிலியில்லாத் தங்குமிடங்களை அமைப்பதற்கும் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஆன்மீக மரபுகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களைப் பாதுகாப்பது நமது கூட்டுப் பொறுப்பு என்று குறிப்பிட்ட அவர், தனது தந்தை முகேஷ் அம்பானியின் வழியில் இந்தத் தொண்டு பணிகளை முன்னெடுத்து வருகிறார்.