“30 வருஷ உழைப்பா? நேத்து வந்த பயலா?” – நடுவானில் விஜய்யிடம் வெடித்த புஸ்ஸி ஆனந்த்! அதிர்ச்சியில் த.வெ.க நிர்வாகிகள்.!

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோருக்கு இடையே விமானப் பயணத்தின் போது ஏற்பட்ட காரசாரமான விவாதம் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாநாட்டை முடித்துவிட்டு சென்னை திரும்பும் வழியில், தனியார் விமானத்தில் பயணித்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக விஜய்யுடன் பயணித்து வரும் புஸ்ஸி ஆனந்த், கட்சியில் சமீபத்தில் இணைந்தவர்களின் ஆதிக்கம் குறித்து மிகுந்த மனவருத்தத்துடன் விஜய்யிடம் முறையிட்டதாகத் தெரிகிறது.

குறிப்பாக, வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியை யாருக்கு ஒதுக்குவது என்பது தொடர்பாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. ஆதவ் அர்ஜுனா போன்ற புதிய வரவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதை சுட்டிக்காட்டிய புஸ்ஸி ஆனந்த், “30 வருஷ உழைப்பா? நேற்று வந்த பயலா?” என்று ஆவேசமாகக் கேட்டதுடன், “என்னை ஒழித்துக்கட்டப் பார்க்கிறார்கள், நீங்களும் வேடிக்கை பார்க்கிறீர்கள்” என்று கண்ணீர் மல்க விஜய்யிடம் மல்லுக்கட்டியதாகக் கூறப்படுகிறது. தான் போட்டியிட விரும்பிய சோழிங்கநல்லூர், அம்பத்தூர் மற்றும் மயிலாப்பூர் ஆகிய தொகுதிகள் பல்வேறு காரணங்களால் கைநழுவிப் போனது அவரது அதிருப்திக்குக் காரணமாக அமைந்துள்ளது.

புஸ்ஸி ஆனந்தின் இந்தக் குமுறலுக்குப் பின்னால் பெரும் அரசியல் கணக்குகள் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். சென்னையில் உள்ள தொகுதிகளில் தவெக வலுவாக இருப்பதாகக் கருதப்படும் நிலையில், பாதுகாப்பான தொகுதியைத் தேர்வு செய்வதில் கட்சியின் மூத்த நிர்வாகிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. குறிப்பாக, ஆதவ் அர்ஜுனாவின் வருகைக்குப் பிறகு கட்சியில் தமக்கான முக்கியத்துவம் குறைகிறதோ என்ற அச்சம் புஸ்ஸி ஆனந்திற்கு ஏற்பட்டுள்ளதையே இந்த விமானப் பயண களேபரம் வெளிப்படுத்துகிறது.

விமானத்தில் நடந்த இந்தத் திடீர் மோதல் விஜய்யைச் சங்கடத்தில் ஆழ்த்தியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்சியின் இரண்டு முக்கியத் தூண்களாகக் கருதப்படும் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோருக்கு இடையே ஏற்பட்டுள்ள இந்தப் போட்டி, வரும் சட்டமன்றத் தேர்தலில் தொகுதிப் பங்கீட்டின் போது எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வில்லிவாக்கம் தொகுதியை விஜய் யாருக்கு வழங்கப்போகிறார் என்பதைப் பொறுத்தே, தவெகவின் உட்கட்சிப் பூசல் முடிவுக்கு வருமா அல்லது தீவிரம் அடையுமா என்பது தெரியவரும்.

Muthu Mani

Recent Posts

வாட்ஸ்அப் வைத்துள்ளவர்கள் உஷார்..! ஒரு கிளிக் செய்தால் காலி…! ‘பாஸ் ஸ்கேம்’ என்ற பெயரில் பரவும் புதிய ஆபத்து…! மத்திய அரசு அதிரடி எச்சரிக்கை…!!

நிறுவனங்களின் உயர் அதிகாரிகள், தலைமைச் செயல் அதிகாரிகள் அல்லது அரசு அதிகாரிகளின் வாட்ஸ்அப் சுயவிவரப் படம் மற்றும் பெயரைப் பயன்படுத்தி,…

14 minutes ago

ஷாக்… போன் பேசிட்டே போனவருக்கு நேர்ந்த கொடூரம்…! திறந்திருந்த மேன்ஹோலுக்குள் விழுந்து பலி… நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

மும்பை சாந்தீவலி பகுதியில் பெய்த கனமழையின் போது, திறந்திருந்த பாதாள சாக்கடை மேன்ஹோலில் தவறி விழுந்து அஸ்லாம் இசாக் ஷேக்…

19 minutes ago

அறிவாலயத்தை உலுக்கிய அந்த ஒரு போன் கால்… திமுக சீனியர்கள் திடீர் அதிர்ச்சி…. ஸ்டாலினுக்கு செந்தில் பாலாஜி கொடுத்த புதிய தலைவலி…. வெளியான பகீர் தகவல்..!

தமிழக அரசியலில் தற்போதைய ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் நடத்தப்பட்ட ரூ.35 கோடி குதிரை…

41 minutes ago

திமுகவை கதறவிட்ட விஜய்… சல்லி சல்லியாய் உடைந்த கூட்டணி… பின்னணியில் நடந்த அந்த ரகசிய பிளான்… தமிழக அரசியலில் இதுவரை இல்லாத அதிரடி திருப்பம்…!

தமிழக அரசியல் களம் எப்போதும் திமுக, அதிமுக என்ற இரு துருவங்களை மையமாகக்கொண்டே சுழன்று வந்துள்ளது. அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்.,…

46 minutes ago

“ஆட்டோ சவாரியில் நடந்த ஏமாற்றம்…? பயணி கொடுத்த ரூ50 நோட்டை பார்த்து ஓட்டுநர் செய்த அதிரடி காரியம்…! மிரண்டு போன நெட்டிசென்கள்…!!”

நாக்பூரைச் சேர்ந்த ராஜேந்திர தெம்ரே என்ற ஆட்டோ ஓட்டுநர், தமக்குத் தற்செயலாகக் கிடைத்த கூடுதல் பணத்தைக் கொண்டு செய்த நற்செயல்…

48 minutes ago

இனி ஹாஸ்பிடல் ஓட தேவையில்லை… தலைவலி, வறட்டு இருமல் முதல் வாய்வுத் தொல்லை வரை… எல்லாத்துக்கும் ‘நோ’ மாத்திரை…! இதோ உங்க கிட்சன் ரகசியம்..!”

சளி, இருமல், செரிமானக் கோளாறு போன்ற அன்றாட உடல்நலப் பிரச்சினைகளுக்கு உடனடியாக மருந்துக்கடைகளுக்கும் மருத்துவமனைக்கும் ஓடுவதைத் தவிர்த்து, நம் வீட்டு…

50 minutes ago