முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்சண்டுகும் கடந்த ஜூலை 12ஆம் தேதி பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு 2 கோடி ரூபாய் மதிப்புள்ள வாட்ச் பரிசாக கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் புதுமண தம்பதிக்கு பிரபலங்கள் கொடுத்த திருமண பரிசுகள் பற்றி தகவல் வெளியாகி அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
பிரபல நடிகரான ஷாருக்கான் பிரான்ஸ் நாட்டில் 40 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு அப்பார்ட்மெண்ட்டை வாங்கி புதுமணத் தம்பதிக்கு பரிசாக கொடுத்துள்ளார். இதனை அறிந்த திரையுலகினர் வாயடைத்து போனார்கள். இதனை அடுத்து அம்பானியின் நெருங்கிய நண்பரும் நடிகருமான அமிதாபச்சன் குடும்பத்தினர் 30 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு மரகத நெக்லஸை புதுமண தம்பதிக்கு பரிசாக கொடுத்துள்ளனர். அமிதாபச்சனின் குடும்பத்தினர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலானது.
அடுத்ததாக பாலிவுட் நடிகரான சல்மான்கான் ஒரு சொகுசு பைக்கை புதுமண தம்பதிக்கு பரிசாக கொடுத்துள்ளார். அதன் மதிப்பு 15 கோடி ரூபாய் ஆகும். அடுத்ததாக பிரபல நடிகையான தீபிகா படுகோனும் அவரது கணவர் ரன்வீர் சிங்கும் இணைந்து ஒரு ரோல்ஸ் ராய்ஸ் காரை புதுமண தம்பதிக்கு பரிசாக கொடுத்துள்ளனர். அதன் மதிப்பு 20 கோடி ரூபாய் ஆகும். கொரோனா காரணமாக அக்ஷய் குமார் திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை. அதன் பிறகு நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார்.

#image_title
அவர் 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காஸ்ட்லி தங்க பேனாவை ஆனந்த் அம்பானிக்கு கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து அலியா பட் ரன்பீர் கபூர் தம்பதியினர் மெர்சிடஸ் காரை புதுமணத் தம்மதிக்கு பரிசாக கொடுத்துள்ளனர். அதன் மதிப்பு 9 கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. இதே போல ரஜினிகாந்த் மகேஷ்பாபு உள்ளிட்ட பிரபலங்கள் காஸ்ட்லியான பொருட்களை ஆனந்த் அம்பானி ராதிகா மெர்சண்டுக்கு திருமண பரிசாக கொடுத்துள்ளனர்.

#image_title