பிரபல கிரிக்கெட் வீரரான வருண் சக்கரவர்த்தி கடைசியாக 2021 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக விளையாடினார். கடந்த 2021 ஆம் ஆண்டு உலக கோப்பையில் விளையாடி உள்ளார். அதன் பிறகு இந்திய அணிக்கு அவர் தேர்வாகவில்லை. அந்த தொடரில் மூன்று போட்டிகளில் விளையாடிய வருண் சக்கரவர்த்தி ஒரு விக்கெட் கூட விழ்த்த வில்லை. அதற்கும் பிறகு அவருக்கு இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.
ஆனால் வருண் சக்கரவர்த்தி ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடி உள்ளார். 2023 மற்றும் 2024 ஐ பி எல் சீசன் அவர்களின் தனது முழு திறமையை வெளிப்படுத்தினார். 2024 ஆம் ஆண்டு ஐ பி எல் சீசனில் வருண் சக்கரவர்த்தி 21 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் ஆவதற்கு வருண் சக்கரவர்த்தி முக்கிய காரணமாக அமைந்தார். கடந்த 2014 ஆம் ஆண்டு ஜீவா திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை சுசீந்திரன் இயக்கினார்.
இந்த படத்தில் விஷ்ணு ஹீரோவாக நடித்தார். ஸ்ரீதிவ்யா ஹீரோயின் ஆக நடித்துள்ளார். இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர் போல வரவேண்டும் என கனவு கண்டு கதாநாயகனும் அவரது நண்பரும் முயற்சி செய்கின்றனர். ஆனால் இன வேறுபாட்டு காரணமாக ரஞ்சிக்கோப்பையில் விளையாட வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இதனால் கதாநாயகனின் நண்பன் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொள்கிறான்.
அந்த வெறுப்பிலும் சாதிக்க நினைத்து போராடிய ஹீரோவுக்கு பஞ்சாப் அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்கிறது. அதன் பிறகு அவன் தனது திறமையை வெளிப்படுத்தி ஜெயித்து காட்டுவது தான் கதை. இந்த படத்தில் கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி உதவ இயக்குனராக வேலை பார்த்துள்ளார். இந்த நிலையில் படம் எடுக்க ஆசைப்படும் வருண் சக்கரவர்த்தி இரண்டு மூன்று கதைகளை தயாராக வைத்துள்ளதாவும், விரைவில் அவர் படம் எடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.