நான் என்ன நல்லது பண்ணனு தெரியல, இப்படி ஒரு சந்தோஷம்.. குழந்தை பிறந்ததை மகிழ்ச்சியாக அறிவித்த CWC இர்பான்..!

By Mahalakshmi on ஆடி 24, 2024

Spread the love

பிரபல யூட்யூபர் மற்றும் குக் வித் கோமாளி பிரபலம் இர்பானுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த செய்தியை அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்து இருக்கின்றார்.

தமிழகத்தில் பிரபல யுடியூபராக வலம் வருபவர் முகமது இர்பான். இவர் இர்பான் வியூ என்கின்ற youtube சேனலை நடத்தி வருகின்றார். இதில் 35 லட்சத்திற்கும் மேற்பட்ட சப்ஸ்கிரைபர்கள் இருக்கிறார்கள். தினம் தோறும் பல இடங்களுக்கு சென்று பலவிதமான உணவுகளை ருசித்து சாப்பிட்டு அதனை ரிவ்யூ-வாக மக்களுக்கு கொடுப்பதுதான் இவரது வேலை.

   

   

இதை செய்து பல லட்சம் மக்களின் ஆதரவை பெற்றிருக்கின்றார். சமீபத்தில் தான் இவருக்கு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது எடுத்துக் கொண்ட புகைப்படமும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. திருமணத்திற்கு பிறகு அவரது மனைவி கர்ப்பமாக இருந்திருந்தார்.

 

அவர் தனக்கு என்ன குழந்தை பிறக்கப் போகிறது என்பதை வெளிநாட்டிற்கு சென்று தெரிந்து கொண்டு வந்து அதனை சென்னையில் தனது வீட்டில் மிகப் பெரிய பார்ட்டியாக வைத்து அறிவித்திருந்தார். இது தொடர்பாக சுகாதாரத்துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. பின்னர் அந்த வீடியோவை டெலிட் செய்த இர்பான் அதற்கு மன்னிப்பும் கேட்டிருந்தார். இந்த சம்பவம் மிகப்பெரிய சர்ச்சையில் ஏற்படுத்தியிருந்தது.

இதன் பிறகு தான் இவர் விஜய் டிவியில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தற்போது சிறந்த குக்காக இருந்து வருகின்றார். இந்நிலையை தனது மனைவிக்கு பெண் குழந்தை பிறந்து விட்டதாக தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்திருக்கின்றார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது” நான் என்ன நல்லது பண்ணியிருக்கேன்னு தெரியல எனக்கு இப்படி ஒரு சந்தோஷம் கிடைச்சிருக்கு, மிராக்கிள் கடவுளுக்கு நன்றி” என்று அவர் பதிவிட்டு இருக்கின்றார். இந்த செய்தியை பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Mohamed Irfan (@irfansview)