நம்பர் ஒன் கோடீஸ்வரரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்சண்ட்க்கும் கடந்த 12-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமணம் மும்பையில் இருக்கும் ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது. சுமார் ஆறு மாத காலமாகவே திருமண கொண்டாட்டங்கள் களை கட்டியது.
இதுவரை இல்லாத அளவுக்கு ஒட்டுமொத்தத்துறை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் பிரமுகர்கள் என ஏராளமானோர் திருமணத்தில் பங்கேற்றனர். சூர்யா, ஜோதிகா, தமன்னா, காஜல் அகர்வால், அட்லி, பூஜா ஹெக்டே, மகேஷ்பாபு, வெங்கடேஷ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தோனி உள்ளிட்ட ஏராளமானோரை திருமண நிகழ்ச்சியில் பார்க்க முடிந்தது. திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு அம்பானி சார்பில் கோடிக்கணக்கு மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்பட்டது.
அதிலும் அம்பானி வீட்டினர் அணிந்திருந்த உடைகள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. முன்னதாக நடைபெற்ற அனைத்து நிகழ்ச்சிகளிலும் ராதிகா மெர்சண்ட் டைமண்ட் தங்கத்தால் ஆன உடைகளை அணிந்து பிரம்மிக்க வைத்தார். இதே போல ஆனந்த் அம்பானியும் ப்ரூச், தலைப்பாகை போன்றவற்றில் அணிந்திருந்த நகைகள் பலரது கவனத்தையும் ஈர்த்தது. திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகளில் ஆனந்த் அம்பானி தனது சகோதரர் ஆகாஷ் அம்பானி பரிசாக கொடுத்த ஒரு ப்ரூச்சை அணிந்திருந்தார்.
அது பச்சை நிற எமரால்டு கல் மீது சிறுத்தை அமர்ந்திருப்பது போல டிசைன் செய்யப்பட்டிருக்கும். அதில் மொத்தம் 51 வைரக்கற்கள், 2 மரகத கற்களும்,1 ஓனிக்ஸ் வைரமும் இருக்கும். 18 கேரட் தங்கத்தில் அந்த ப்ரூச்சை உருவாக்கியுள்ளனர். மேலும் 720 கேரட் கொண்ட ரத்தின கல் மீது சிறுத்தை அமர்ந்திருப்பது போல டிசைன் செய்யப்பட்டிருந்தது. அதன் விலை 1 லட்சத்து 62 ஆயிரம் அமெரிக்க டாலராகும். இந்திய ரூபாய் மதிப்பில் அந்த ப்ரூச்சின் விலை 1.3 கோடி இருக்கும் என தெரியவந்துள்ளது.