ஆனந்த் அம்பானியின் திருமணம் குறித்து தமிழ் நடிகர் ஜெகன் சில கருத்துக்களை தெரிவித்து இருக்கின்றார்.
இந்தியா முழுவதும் இல்ல, உலகம் முழுவதும் ட்ரெண்டிங்கில் இருப்பது ஆனந்த் அம்பானியின் திருமணம் தான். மிகப்பெரிய பொருட்செளவில் பிரம்மாண்டமாக இவரின் திருமணம் நடைபெற்றுள்ளது. கடந்த ஜூலை 12ஆம் தேதி மும்பையில் இருக்கும் ஜியோ உலக வர்த்தக மையத்தில் திருமணம் நடைபெற்ற நிலையில் பல நிகழ்ச்சிகள் கொண்டாட்டங்கள் நடைபெற்றன.
திருமண வைபோகங்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் நிகழ்ச்சிகள் களைக்கட்டி வருகின்றன. இந்த திருமணத்திற்கு மட்டும் சுமார் 4000 முதல் 5000 வரை செலவாகி இருக்கும் என்று கூறப்படுகின்றது. ஆனால் இது எல்லாம் அம்பானி வீட்டு சொத்தில் வெறும் 0.5% தானம். உலகமே உற்றுப் பார்க்கும் வகையில் தனது மகனின் திருமணத்தை சிறப்பாக நடத்தி வைத்திருக்கிறார்கள் முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானி.
இந்த திருமண நிகழ்ச்சியில் தமிழ் சினிமா, கன்னட சினிமா, தெலுங்கு சினிமா, பாலிவுட் பிரபலங்கள், ஹாலிவுட் பிரபலங்கள், மிக முக்கிய தொழிலதிபர்கள், பிரதமர் மோடி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி இருந்தார்கள். அது மட்டும் இல்லாமல் பல பிரபலங்கள் ஆட்டம் போட்டு கொண்டாடிய வீடியோக்கள் எல்லாம் இணையத்தில் மிக வைரல் ஆகி வந்தது.
ஏன் தலைவர் ரஜினி கூட அம்பானி வீடு திருமணத்தில் நடனமாடி அசத்தி இருக்கின்றார். இப்படி அனைவரும் இவர்களின் திருமணத்தை பற்றி பேசி வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் ஜெகன், அம்பானி திருமணம் குறித்து ஒரு விஷயத்தை பகிர்ந்து இருக்கின்றார். அவர் அதில் தெரிவித்திருந்ததாவதுல்: “அன்புள்ள ஆனந்த் அம்பானி உங்களுக்காக நான் வருந்துகிறேன்.
View this post on Instagram
மிகவும் ஏழைகளின் திருமணத்தில் கூட வந்தவர்களின் கவனம் அனைத்தும் மணமக்கள் மீது இருக்கும். ஆனால் உங்கள் திருமணத்தில் அப்படி எதுவும் நடக்கவில்லை. உங்களையும் உங்கள் வருங்கால மனைவியையும் தவிர அங்கு வந்த பல பிரபலங்களின் மீது தான் அனைவரின் கவனமும் இருந்தது. தயவு செய்து தேனிலவுக்காவது தனியாக சென்று விடுங்கள்” என்று அவர் கூறியிருக்கின்றார்.