#image_title
நடிகர் சிம்பு அலைபாயுதே படத்தில் வந்த சிறிய மிஸ்டேக் ஒன்றை பற்றி பேசிய பழைய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. நடிகராக மட்டுமில்லாமல் பாடகர், பாடல் ஆசிரியர், இயக்குனர் என பன்முகத் தன்மை கொண்ட இவர் கடைசியாக பத்து தல என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
தொடர்ந்து சினிமாவில் தோல்விகளை சந்தித்து வந்த சிம்பு மாநாடு என்ற திரைப்படத்தின் மூலமாக தன்னுடைய சினிமாவில் செகண்ட் இன்னிங்ஸ் தொடங்கியிருந்தார். அடுத்தடுத்து இவர் நடிப்பில் வெளிவந்த அனைத்து படங்களும் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து கமலஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகியிருந்தார்.
அதை தொடர்ந்து இப்படத்தின் தொடர்பான எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. தற்போது கமல் மற்றும் மணிரத்தினம் கூட்டணியில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் உருவாகும் திரைப்படம் தக் லைஃப். இந்த திரைப்படத்தில் சிம்பு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கின்றார். இது தொடர்பான என்ட்ரி டீசர் கூட சமீபத்தில் வெளியாகி இணையத்தில் படு வைரலாகி வந்தது.
இந்நிலையில் நடிகர் சிம்பு சூட்டிங் ஸ்பாட்டில் பேசிய பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. 2007 ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான காளை படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ தான் அது. தருண் கோபி இயக்கிய இப்படத்தில் வேதிகா, சங்கீதா, சந்தானம் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தார்கள். ஜிவி பிரகாஷ் குமார் இப்படத்தை இயக்கியிருந்த இப்படம் அந்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை.
அந்த வீடியோவில் சிம்பு பேசியிருந்ததாவது “சினிமாவில் ஏகப்பட்ட வேலை இருக்கு, படத்தில் நாங்கள் வசனம் பேசும்போது நேரடியாக அந்த குரல் வந்து விடாது. நாகரா என்ற கருவி உள்ளது அதில் இருக்கும் மைக் மூலம் நாங்கள் பேசும் வசனம் ரெக்கார்ட் பண்ணி எடிட்டிங் ரூமுக்கு வந்துவிடும், இந்த குரலையும் அந்த காட்சியையும் ஒன்றிணைத்து எடிட் பண்ணி அதன் பிறகு டப்பிங் செல்லும்.
படத்துல ஷூட்டிங் எடுக்கும் போது சம்பந்தப்பட்ட நபருக்கு அருகே இந்த மைக் பொருத்தப்பட்டிருக்கும். அலைபாயுதே படத்தில் ஷாலினியும் ஸ்வர்ணமால்யாவும் வீட்டை விட்டு வெளியே சென்று திருமணம் செய்ய செல்வார்கள். அப்போது அவரது அப்பா கிரவுண்டில் வந்து எங்கம்மா போறீங்க என்று கேட்பார். அப்போது அந்த மைக் உள்ளே வரும்” என்று அந்த படத்தில் நடந்த மிஸ்டேக் குறித்து பேசி இருப்பார் சிம்பு. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பரோடா வங்கி 2,482 வங்கி அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு மட்டும் 132…
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், முதலமைச்சர் விஜய் தினமும் 18 முதல் 20 மணிநேரம் வரை…
கூட்டுறவுத்துறை வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்வதில் அரசு புதிய மாற்றங்களை அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, தகுதியான பயனாளிகளின் இறுதிப் பட்டியலைத்…
மினி கேஸ் அடுப்புகளைப் பயன்படுத்துவோர் எப்போதும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கேஸ் கேனிஸ்டரில் சிறிய பள்ளம், துருப்பிடித்த அடையாளம்…
தொழிற்சாலைகளிலும் ஆலைகளிலும் இயந்திரங்களுடன் பணிபுரியும்போது, எதிர்பாராமல் ஏற்படும் ஆபத்துகளை முன்னரே கணிப்பது மிகவும் முக்கியம். ஒரு விவேகமான பணியாளர், தான்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் பழைய பகை காரணமாக 35 வயது நபர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். சிக்கந்திராராவ்…