“காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது” டாக்சி ஓட்டுநருக்கு அடித்த அதிர்ஷ்டம்.. ஒரே நாளில் லட்சாதிபதி..!!

By Soundarya on தை 6, 2026

Spread the love
கேரளாவைச் சேர்ந்த பஷீர் என்ற டாக்ஸி ஓட்டுநருக்கு அபுதாபி ‘பிக் டிக்கெட்’ (Big Ticket) வாராந்திர குலுக்கலில் சுமார் 24 லட்சம் ரூபாய்  பரிசு கிடைத்துள்ளது. வெளிநாட்டில் வேலை தேடிச் செல்லும் முயற்சியில் இருந்த பஷீருக்கு, இந்த அதிர்ஷ்டம் பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.
தனது நண்பர்களுடன் இணைந்து வாங்கிய டிக்கெட்டிற்கு இந்தத் தொகை கிடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2 வருடங்களாக துபாயில் லாட்டரி டிக்கெட் வாங்கி வரும் இவருக்கு இம்முறை அதிர்ஷ்டம் அடித்துள்ளது. இந்த பணத்தைக் கொண்டு தனது கடன்களை அடைக்கவும், குடும்பத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளார். பிக் டிக்கெட் குலுக்கலில் இந்தியர்கள், குறிப்பாக மலையாளிகள் தொடர்ந்து கோடிக்கணக்கான ரூபாய்களை வென்று வருவது குறிப்பிடத்தக்கது.