ஓசூர் சாணமாவு பகுதியைச் சேர்ந்த அதிமுகவின் முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினரான எஸ்.ஆர். சம்பங்கி, தனது ஆதரவாளர்களுடன் தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் முன்னிலையில் இன்று அக்கட்சியில் இணைந்தார். சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தவெக தலைவர் விஜய் அவருக்குக் கட்சித் துண்டு அணிவித்து முறைப்படி வரவேற்றார்.
2026 சட்டமன்றத் தேர்தலை ஒட்டி, அதிமுக, திமுக உள்ளிட்ட மாற்றுக்கட்சிகளிலிருந்து முக்கியப் பிரமுகர்கள் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து வருவது அரசியல் களத்தில் கவனிப்புக்குள்ளாகி வருகிறது
