Zero Budjet Farming மூலம் தேங்காய் பொருட்கள் பிசினஸ்… ஆண்டிற்கு ரூ. 25 லட்சம் வருவாய் ஈட்டும் கர்நாடக Engineer…

By Meena on செப்டம்பர் 27, 2024

Spread the love

நாம் ஏதாவது ஒரு சூழ்நிலையில் வளர்ந்து வர்ந்திருப்போம். கிராமம் அல்லது நகரமாக இருக்கும். ஒரு சிலர் நகரத்தில் பிறந்து வளர்ந்தாலும் கிராமத்திற்கு சென்று வந்த அனுபவங்கள் இருக்கும். ஆனால் கிராமத்திலே பிறந்து வளர்ந்து பின்னர் நகர வாழ்க்கைக்கு திரும்பியவர்களுக்கு தங்களது கிராமத்தை ஒரு நாளும் மறக்க முடியாது. அப்படி ஒரு இளைஞன் கிராமத்திலிருந்து படித்து விட்டு வெளியே வருகிறான். பின்னர் தனது கிராமத்திற்காக ஏதாவது செய்ய வேண்டுமே என்று ஒரு தொழிலை உருவாக்கி அதில் வெற்றி கண்டிருக்கிறார் கர்நாடகாவை சேர்ந்த இளைஞர் அவரைப் பற்றி இனி காண்போம்.

   

விவசாயக் குடும்பத்தை சேர்ந்தவர் மது தனது தந்தை விவசாயம் செய்து அதை கூடவே வேலை செய்து பார்த்து வளர்ந்தார் மது. கர்நாடகா கற்குண்டாலை சேர்ந்தவர் இவர். மழை தட்பவெட்பம் சுற்றுச்சூழல் என விவசாயம் அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. அதாவது இருண்ட பக்கத்தையும் பார்த்து வளர்ந்தார் மது. பின்னர் கர்நாடகாவில் இன்ஜினியரிங் பட்டப்படிப்பில் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் முதுகலை படிப்பை முடித்து எட்டு ஆண்டுகள் மென்பொருள் பொறியாளராக முதலீடு வங்கியாளராக பணியாற்றினார் மது.

   

ஆனாலும் தனது கிராமத்திற்காகவும் தன் அப்பாவை போலே கஷ்டப்படும் விவசாயிகளுக்காகவும் ஏதாவது செய்ய வேண்டும் என்று அவர் யோசித்துக் கொண்டே இருந்தார். அவர் பெரிதாக கண்டது என்னவென்றால் விவசாயம் செய்வதற்கு பெரிய முதலீடு தேவைப்பட்டது. ஆனால் கிடைத்த லாபமோ அந்த அளவுக்கு பெரிதாக இல்லை. அதனால் ஜீரோ பட்ஜெட் இறக்கை விவசாயத்தை அவர் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தார்.

 

அப்படி ஆரம்பித்தது தான் டெங்கின். 2017 ஆம் ஆண்டு மது டெங்கின் என்று பிராண்டை உருவாக்கினார். அவர்களது கிராமம் தென்னை வளம் நிறைந்தது என்பதால் அதை சார்ந்த தனது தொழிலை வளர்க்க முடிவெடுத்தார். 2020இல் டெங்கினில் கவனம் செலுத்த தனது வேலையை விட்டுவிட்டு கிராமத்திற்கே திரும்பினார் மது.

ஒரு பயிரையே கிராமங்களில் விவசாயிகள் சார்ந்து இருக்காமல் பல பயிர்களை பயிரிட அவர் உதவி செய்தார். கிராம பஞ்சாயத்துகள் எஃபிஓகளுடன் கூட்டு சேர்ந்து விவசாயிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அதாவது அவருடைய நோக்கம் ஒரே பயிரை நம்பி ஒரு விவசாயி லாபத்தை எதிர்பார்காமல் ஒரே சமயத்தில் அங்க கால நிலைக்கு ஏற்ப வெவ்வேறு பயிர்களை பயிரிட வேண்டும் என்பதை அவர் உணர்த்தினார்.

அவரது கிராமம் தேங்காய் வளம் நிறைந்தது என்பதால் தேங்காயின் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்ய தொடங்கினார். இதன் மூலம் விவசாயிகளுக்கும் கிராம புற பெண்களும் வேலைவாய்ப்பை ஏற்படுத்தினார். தேங்காய் உற்பத்தி பொருட்களான விர்ஜின் தேங்காய் எண்ணெய், தேங்காய் சர்க்கரை, தேங்காய் சிப்ஸ், தேங்காய் சாக்லேட், ஸ்க்ரப்பர் சோப், தேங்காய் ஓடில் செய்யப்பட்ட கப் போன்றவற்றை இன்ஸ்டாகிராமில் சந்தைப்படுத்தி சொந்தமாக டெலிவரி செய்ய ஆரம்பித்தார் மது.

இதன் மூலம் இது ஜீரோ பட்ஜெட் ஃபார்மிங் ஆக மாறி இருக்கிறது. தற்போது நாடு முழுவதும் 500 லிட்டர் வெர்ஜின் தேங்காய் எண்ணெயை டெங்கின் வழங்கி வருகிறது இவர்கள் தயாரிப்புகள் மொத்த விற்பனை மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் b2b சேனல் மூலம் விற்கப்படுகின்றன. கார்ப்பரேட்களின் மொத்த ஆர்டர்களையும் எடுத்து செய்கிறார்கள்.

இது மட்டுமல்லாமல் தனது டெங்கின் பிராண்டு மூலம் மது கோகோ டூரிசம் என்ற ஒன்றையும் தொடங்கி இருக்கிறார். இது வாடிக்கையாளர்களை அவர்களது பண்ணைக்கு ரச் செய்து சுகாதாரமாக பொருட்கள் எப்படி உற்பத்தி செய்யப்படுகிறது என்பதை அவர்கள் கண்டு களிக்கலாம். மேலும் களப்பணிகள் மேற்கொள்ளலாம். தற்போது டெங்கின் மூலம் மது ஆண்டுக்கு 25 லட்ச ரூபாய் வருவாய் ஈட்டி வருகிறார். முயற்சி இருந்தால் எந்த தடையும் தகர்க்கலாம் என்பதற்கு உதாரணமாக இருக்கிறார்.