நடிகை சுவாசிகா லப்பர் பந்து திரைப்படத்தில் அட்டகத்தி தினேஷுக்கு மனைவியாக நடித்திருப்பார். இந்த படம் இரண்டு நாட்களுக்கு முன்பு ரிலீஸ் ஆகி வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மலையாள நடிகையான சுவாசிகா தமிழில் கோரிப்பாளையம், சாட்டை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஆனால் இவரைப் பற்றி அறியாத திரையுலக விஷயங்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம். லப்பர் பந்து படத்தில் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுவாசிகா நடிக்கணும் என்கிற கனவோடு நானும் எங்க அம்மாவும் சென்னைக்கு வந்தோம்.
ஆனா அது நிறைவேறாததால் மறுபடியும் ஊருக்கே போயிட்டோம் என கூறியிருப்பார். அந்த கனவு லப்பர் வந்து படம் மூலமாக நிறைவேறி இருக்கு என சுவாசிகா கூறியுள்ளார். 16 வயதிலேயே சுவாசிகா திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். 2009-ஆம் ஆண்டு தமிழில் வெளியான வைகை திரைப்படம் மூலமாக சுவாசிக்கா திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அந்த படம் பெரிதாக போகவில்லை. இதனையடுத்து ராசு மதுரவன் இயக்கத்தில் உருவான கோரிப்பாளையம் திரைப்படத்தில் சுவாசிகா நடித்துள்ளார்.
சாட்டை திரைப்படத்தில் சமுத்திரக்கனியின் மனைவியாகவும் நடித்திருப்பார். ஒரு சில தமிழ் திரைப்படங்களில் சுவாசிகா நடித்துள்ளார். ஆனால் தமிழ் படங்கள் அவருக்கு கை கொடுக்கவில்லை. மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களான மம்முட்டி, மோகன்லால் ஆகியோரின் படங்களில் சுவாசிகா நடித்துள்ளார். மம்முட்டியின் சிபிஐ 5 உள்ளிட்ட திரைப்படங்களில் சுவாசிகா நடித்துள்ளார். மோகன்லாலுடன் மான்ஸ்டர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் ஏராளமான திரைப்படங்களில் சுவாசிகா நடித்துள்ளார்.
2020 ஆம் ஆண்டு ரிலீசான வசந்தி என்ற திரைப்படத்தில் சுவாசிகா நடித்துள்ளார். இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக சுவாசிக்காவுக்கு கேரள மாநில விருது வழங்கப்பட்டது. பெரும் முயற்சிக்கு பிறகு அவருக்கு அந்த அங்கீகாரம் கிடைத்தது. இதையும் தாண்டி சீரியல்களிலும் சுவாசிகா நடித்துள்ளார். பல முன்னணி நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளராக வேலை பார்த்துள்ளார். இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து அசோதா கதாபாத்திரத்திற்கு நிறைய பேரை நடிக்க வைக்கலாம் என யோசித்துள்ளார். அதன் பிறகு சுவாசிக்காவை நடிக்க வைத்துள்ளார். கதாபாத்திரத்தை புரிந்து கொண்டு சுவாசிகா போல்டாக நடித்துள்ளார்.