அரவிந்த்சாமி தென்னிந்தியாவில் பிரபலமான நடிகராவார். இவர் திருச்சிராப்பள்ளியில் தொலைக்காட்சி நடிகர் டெல்லி குமாருக்கு பிறந்தார். ஆனால் தனது மாமாவிடம் வளர்ந்தவர் அரவிந்த்சாமி. தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் அரவிந்த்சாமி.

1991 ஆம் ஆண்டு ரஜினி மம்மூட்டி நடித்த தளபதி திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் தோன்றியதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் அரவிந்த்சாமி. பின்னர் 1992 ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கிய ரோஜா திரைப்படத்தில் நாயகனாக நடித்தார். இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. முதல் படத்தின் மூலமாகவே பெயரும் புகழும் அடைந்தார் அரவிந்த்சாமி.
தொடர்ந்து மறுபடியும், பம்பாய், இந்திரா, மின்சாரக்கனவு, என் சுவாச காற்றே போன்ற திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற அரவிந்த்சுவாமி 2000 களின் ஆரம்ப கட்டத்தில் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். 2012 ஆம் ஆண்டு கடல் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கம்பேக் கொடுத்தார்.
அதற்குப் பிறகு தனி ஒருவன், போகன் போன்ற திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்தார். தற்போது அரவிந்த்சாமி கார்த்தி நடித்திருக்கும் மெய்யழகன் திரைப்படம் வெளிவர தயாராக இருக்கிறது.

ஒரு நேர்காலில் கலந்து கொண்ட அரவிந்த்சாமி அவர்களிடம் தொகுப்பாளர் மக்கள் உங்களைப் போல மாப்பிள்ளை கிடைக்க வேண்டும் என்று பேசிக்கொள்கிறார்கள் நீங்கள் என்ன நினைக்கிறீங்க அப்படின்னு கேள்வி கேட்டிருக்கிறார். அதற்கு பதில் அளித்த அரவிந்த்சாமி வெளிய இருந்து பார்க்கும்போது எல்லாருக்கும் அப்படி தான் இருக்கும். என்கூட வந்து பழகி பாத்தா தான் என்னோட கேரக்டர் தெரியும். என்கூட பழகி இருந்தாங்கன்னா என்ன மாதிரி மாப்பிள்ளை வேணும்னு அவங்க கண்டிப்பா சொல்ல மாட்டாங்க என்று ஓபனாக பேசி இருக்கிறார் அரவிந்த்சாமி.
