#image_title
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக தற்போது வலம் வந்து கொண்டுள்ளவர் யுவன் சங்கர் ராஜா. 90களில் ஆரம்பித்த இவரது இசை பயணம் இன்று வரை வெற்றிகரமாக தொடர்ந்து கொண்டுள்ளது. தீம் இசை என்றாலும் ஹிட் பாடல் என்றாலும் உடனடியாக ரசிகர்கள் நினைவுக்கு வருபவர் யுவன் சங்கர் ராஜா.
#image_title
பில்லா திரைப்படத்தில் நடிகர் அஜித் நடந்து வரும்போது ஒலிக்கும் யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசையை யாராலும் மறக்க முடியாது. இளையராஜாவின் மகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் யுவன் சங்கர் ராஜா. 24 ஆண்டுகளாக தன்னை ஒரு முன்னணி இசையப்பரிப்பாளராக தமிழ் சினிமாவில் தக்க வைத்துக் கொண்டுள்ளார். தனக்கென்று ஒரு பெரும் ரசிகர் கூட்டத்தை கட்டி வைத்திருப்பவர் , யுவன் சங்கர் ராஜா.
#image_title
இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் பாடகர் ஆகவும் தன் குரலால் தனி முத்திரை பதித்துள்ளார். இவர் இசையமைப்பில் வெளிவந்த விருமன், காபி வித் காதல், லவ் டுடே போன்ற திரைப்படங்களின் அனைத்து பாடல்களும் ஹிட் ஆகியது. இதை தொடர்ந்து இவர் தற்பொழுது பல்வேறு திரைப்படங்களுக்கு இசையமைத்துக் கொண்டு வருகிறார். யுவன் ஷங்கர் ராஜா அவர்களின் சகோதரியான பவதாரிணி சமீபத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி ,சிறுவயதிலேயே உயிரிழந்தார்.
#image_title
இந்த எதிர்பாராத நிகழ்வு இளையராஜா அவர்களின் குடும்பத்தையும், மொத்த திரையுலகையுமே சோகத்தில் ஆழ்த்தியது. பவதாரிணி அவர்கள் பல சூப்பர் ஹிட் பாடல்களை திரையுலகில் முன்னணி பாடகியாக வலம் வந்தவர். இந்நிலையில் யுவன் ஷங்கர் ராஜா தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது பிள்ளையின் 3 வது பிறந்தநாளன்று தனது மறைந்த தனது அக்கா பவதாரணியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து ‘ Party for 3, old pic of us’ என்று எமோஷனலாக பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு…
மத்திய பிரதேச மாநிலம் நரசிங்கப்பூர் மாவட்டம், ஹனுமான் வார்டு பகுதியைச் சேர்ந்தவர் 38 வயதுடைய சரோஜ் மெஹ்ரா. இவருக்கு ஏற்கனவே…
தமிழக அரசியல் களத்தில் தற்பொழுது வெடித்துள்ள குதிரை பேரப் புகார்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற…
சென்னையில் பேக்கரி தொழில் தொடங்கி சொந்தமாக லட்சக்கணக்கில் சம்பாதிக்க விரும்பும் நபர்களுக்காகத் தமிழக அரசு ஒரு சூப்பரான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.…
டெலிகிராம் செயலி உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களால் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் ஆவணங்களைப் பகிர்ந்து கொள்ளவும், மற்றவர்களுடன் உரையாடவும்…
மும்பையில் கனமழை காரணமாக 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ள நிலையில், பிரஹன்மும்பை மாநகராட்சி ஆணையர் அஸ்வினி பிடே நகரின் நிலைமையைக் கூர்ந்து…
மத்தியப் பிரதேச மாநிலம் சீஹோர் மாவட்ட அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் எனப்படும் கூரையிலிருந்து மழைநீர் கசிந்து ஒழுகும்…