“கணவருக்காக மருந்து திருட்டு…” கைவிலங்குடன் நின்ற 91 வயது மூதாட்டி… சோஷியல் மீடியாவில் தீயாய் பரவிய உணர்ச்சிப்பூர்வ கதை… உண்மை பின்னணி என்ன…?

By Devi Ramu on ஆவணி 20, 2026

Spread the love

91 வயதான ஹெலன் என்ற மூதாட்டி, இதய நோயால் பாதிக்கப்பட்ட தனது 88 வயது கணவரின் மருத்துவச் செலவைச் சமாளிக்க முடியாமல் மருந்தகத்தில் மருந்தை திருடியதாகவும், அதனால் கைது செய்யப்பட்ட அவரைப் பார்த்து நீதிபதி வழக்கை ரத்து செய்து உதவி செய்ததாகவும் ஒரு செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. AI மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படத்துடன் பகிரப்பட்ட இந்த செய்தி பலரது அனுதாபத்தைப் பெற்றது.

ஆனால், ஃபேக்ட் செக் ஆய்வறிக்கைகளின்படி, இந்த செய்தி முற்றிலும் புனையப்பட்ட ஒரு போலி கதை என்பது தெரியவந்துள்ளது. இதற்கான எந்தவொரு காவல் துறை அறிக்கையோ அல்லது நீதிமன்றப் பதிவுகளோ இல்லை என்பதும், இதில் பயன்படுத்தப்பட்ட புகைப்படம் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் பகிரப்படும் உணர்ச்சிப்பூர்வமான செய்திகளின் உண்மைத் தன்மையை ஆராயாமல் நம்ப வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.