எல்லாம் மனைவிக்காக…! “நடுங்கும் கரங்கள்… 80 வயதிலும் தளராத மன உறுதி…” 52 ஆண்டுகளாக லீவே எடுக்காமல் டாக்ஸி ஓட்டும் தாத்தா…. வியக்க வைக்கும் சம்பவம்…!!

By Devi Ramu on ஆடி 31, 2026

Spread the love

கொல்கத்தாவின் தம் தம் பகுதியைச் சேர்ந்த 80 வயதான ரவீந்திரநாத் சர்க்கார் வயது முதிர்வால் கரங்கள் நடுங்கும் நிலையிலும் தனது வாழ்வாதாரத்திற்காகத் டாக்ஸி ஓட்டி வருகிறார். தனக்கெனச் சொந்தமாக டாக்ஸி இல்லாத நிலையிலும், வாடகைக்கு வண்டியை எடுத்துக்கொண்டு தினமும் அதிகாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை இடைவிடாது உழைக்கிறார். கடந்த 52 ஆண்டுகளாக ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காமல் தொடர்ந்து டாக்ஸி ஓட்டி வரும் இவர், தனது சொந்த ஆஸ்துமா நோயுடனும், இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள வயதான மனைவியின் பராமரிப்பிற்காகவும் போராடி வருகிறார்.

மழைக் காலத்தில் ஒழுகும் உடைந்த கூரையைக் கொண்ட வீட்டில் வசித்து வரும் இவருக்கு வறுமை ஒரு பெரிய தடையாக இருந்தாலும், டாக்ஸியில் பயணிக்கும் பயணிகளிடம் ஒருபோதும் கூடுதல் பணம் கோருவதில்லை. “உங்கள் விருப்பப்படி கொடுங்கள்” என்று புன்னகையுடன் கூறும் இவரது நற்குணம் காண்போரை வியப்பில் ஆழ்த்துகிறது. எந்தவிதப் புகாருமன்றி நாளும் உழைத்து வரும் இவரது தன்னம்பிக்கையும் உழைப்பும், எத்தனை இன்னல்கள் வந்தாலும் வாழ்க்கையில் பின்வாங்கக் கூடாது என்பதற்குச் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கிறது.