சினிமாவில் பல நடிகர் நடிகைகள் இருக்கின்றனர். ஒரு சிலர் திறமையால் மேலே வந்திருப்பார்கள். ஒரு சிலர் ரெக்கமண்டேஷன் மூலம் வந்திருப்பார்கள். ஒரு சிலர் சினிமா பின்புலம் இருப்பதால் வந்திருப்பர். எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் சினிமாவிற்கு சம்பந்தமே இல்லாத ஒரு நடிகை சினிமாவிற்குள் நுழைந்து மிகப் பிரபலமான நடிகையாக இருந்திருக்கிறார். அவர் யார் என்று உங்களுக்கு தெரியுமா?
அவர்தான் 1980 மற்றும் 90களில் மிக பிரபலமாக இருந்தவர் நடிகை ரேவதி. இவரின் இயற்பெயர் ஆஷா கெலூன்னி என்பதாகும். இவர் இந்திய ராணுவத்தில் மேஜராக இருந்த கெலுன்னி என்பவரின் மகள் ஆவார். பள்ளியில் படிக்கும்போதே பேஷன் நிகழ்ச்சியில் பங்கேற்பார் ரேவதி. அப்போது குரூப் போட்டோக்கள் எடுக்கப்பட்டு பிரபல தமிழ் இதழின் அட்டைபடமாக ஒரு புகைப்படம் தேர்வு செய்யப்பட்டது. அதுதான் ரேவதியின் புகைப்படம். இந்த புகைப்படம் இயக்குனர் பாரதிராஜா கண்ணில் பட்டது.
உடனே பாரதிராஜா ரேவதியை அணுகி தான் இயக்கவிருக்கும் மண்வாசனை திரைப்படத்தில் நடிப்பதற்காக அழைத்தார். ரேவதி மட்டுமில்லாமல் பாண்டியன் ஆகிய புது முகங்களை வைத்து மண்வாசனை திரைப்படத்தை இயக்கினார். இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. முதல் படத்தின் மூலமாகவே பெயரும் புகழையும் பெற்றார் ரேவதி.
பிறகு தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார் ரேவதி. மேலும் இவர் சில திரைப்படங்களை இயக்கியும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னணி நடிகர்களுடன் பல வெற்றி திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் ரேவதி.
இந்நிலையில் ஒரு நேர்காணில் கலந்து கொண்ட ரேவதி, என் குடும்பம் சினிமா சார்ந்ததே கிடையாது. என் அப்பா ராணுவத்தில் இருந்தவர். எதேச்சையா ஒரு போட்டோ பத்திரிகையில் வந்ததை வச்சு தான் பாரதிராஜா என்னை கூப்பிட்டாரு. நான் வந்து சினிமாவுக்கு வருவேன் நடிப்பேன் இவ்ளோ பிரபலமா ஆவேன் அப்படின்னு எதையுமே எதிர்பார்க்கல. அப்படி நினைச்சு நான் சினிமா கூட வரல ஆனா இது எல்லாமே நடக்கணும்னு இருந்திருக்கு அப்படின்னு தான் நான் சொல்லுவேன் என்று கூறியிருக்கிறார் ரேவதி.