வைரமுத்து ஒரு புகழ்பெற்ற தமிழ் திரைப்பட பாடல் ஆசிரியர் மற்றும் கவிஞர் ஆவார். இவர் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் உள்ள வடுகப்பட்டியில் பிறந்தவர். விவசாய குடும்பத்தில் பிறந்த வைரமுத்து சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்றார். 1980 ஆம் ஆண்டு நிழல்கள் என்ற திரைப்படத்தில் இது ஒரு பொன்மாலைப் பொழுது என்ற பாடலை எழுதி தமிழ் சினிமாவில் பல செய்தியாக அறிமுகமானார்.
முதல் பாடலே வெற்றி பாடலாக வைரமுத்து அவர்களுக்கு அமைந்தது. தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களில் முன்னணி கதாநாயகர்களுக்கு பாடல்களை எழுதியுள்ளார் வைரமுத்து. இவர் இதுவரை 6000திற்க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி இருக்கிறார். இசைஞானி இளையராஜா மற்றும் ஏ ஆர் ரகுமான் ஆகியோருடன் இவர் இணைந்து எழுதி தயாரித்த பாடல்கள் பல புகழையும் விருதுகளையும் பெற்றது.
பாடல்கள் மட்டுமல்லாது வைரமுத்து அவர்கள் கட்டுரைகள், புதினம், கவிதை தொகுப்புகள் போன்ற பலவற்றை எழுதி இருக்கிறார். தனது அற்புதமான பாடல்களுக்காக கலைமாமணி விருது, சாகித்ய அகடாமி விருது, பத்மபூஷன் விருது சிறந்த தமிழ் திரைப்பட பாடல் ஆசிரியருக்கான தேசிய விருது போன்ற பல விருதுகளை வென்று இருக்கிறார் வைரமுத்து.
இந்நிலையில் சமீப வருட காலமாக வைரமுத்து அவர்களின் பெயர் பாலியல் குற்றச்சாட்டுகளுக்காக பேசப்பட்டு வருகிறது. அதற்கு காரணம் பாடகி சின்மயி தன்னை வைரமுத்து பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாக்கினார் என்று me too என்ற ஒன்றை ஆரம்பித்து குற்றச்சாட்டியதுதான் தான் காரணம். அதற்கு பிறகு தற்போது பாடகி சுசித்ரா அவர்களும் வைரமுத்து அவர்களை பற்றி இந்த குற்றச்சாட்டையும் மீண்டும் வைத்திருக்கிறார்.
இதை பற்றி ஒரு நேர்காணலில் வலைப்பேச்சு அந்தணன் கூறும் பொழுது, ஏன் வைரமுத்து அவர்கள் மீது மீண்டும் மீண்டும் குற்றச்சாட்டு எழுகிறது என்றால் முதலில் சின்மயி ஒரு குற்றசாட்டை வச்சாங்க. அது உண்மையா கூட இருக்கலாம். அதற்குப் பிறகு வைரமுத்து அவர்கள் மேல் அந்த மாதிரி ஒரு பிம்பம் உருவாகிவிட்டது. அவர் சும்மா யார் மீதாவது தலையில் கை வைத்து ஆசீர்வாதம் செய்தால் கூட அவர் அந்த மாதிரி எண்ணத்தில் செய்திருப்பாரோ என்று பலரும் நினைக்க தொடங்கி விட்டனர். ஆனால் இவர் உள்ளே முடங்கி இருக்காமல் வெளியே வந்து இருக்கலாம். இதையெல்லாம் சந்தித்து இருக்கலாம். ஆனால் சுசித்ரா தற்போது கூறுவது எல்லாமே உண்மை போல் தெரியவில்லை என்று ஓபனாக கூறி இருக்கிறார் வலைப்பேச்சு அந்தணன்.