விடாமுயற்சியை ஓவர்டேக் பண்ணுகிறதா குட் பேட் அக்லி…? இது லிஸ்ட்லயே இல்லையே…

By Meena on செப்டம்பர் 20, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித்குமார். இவர் 61 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவர் நடிகர் மட்டுமல்லாமல் எம்ஆர்எப் கார் பந்தய வீரரும் ஆவார். 1990 ஆம் ஆண்டு என் வீடு என் கணவர் என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் தோன்றியான் மூலம் தனது சினிமா பயணத்தை ஆரம்பித்தார் அஜித் குமார்.

   

1995 ஆம் ஆண்டு ஆசை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அனைவரின் பாராட்டையும் பெற்ற அஜித்குமார் 1996 ஆம் ஆண்டு காதல் கோட்டை என்ற திரைப்படத்தில் நடித்தன் மூலம் திருப்புமுனையை பெற்றார். அடுத்ததாக காதல் மன்னன், அவள் வருவாளா, வாலி, அமர்க்களம் போன்ற அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்து புகழ்பெற்றார் அஜித்குமார்.

   

2000 களின் பிற்பகுதியில் பல கமர்சியல் திரைப்படங்களில் கமிட் ஆகி ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகர்களில் ஒருவரானார் அஜித்குமார். எந்த சினிமா பின்புமும் இல்லாமல் தனது திறமையால் உயர்ந்தவர் அஜித் குமார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தற்போது அஜித் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படங்கள் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி திரைப்படம் ஆகும். விடாமுயற்சி திரைப்படம் மகிழ் திருமேனி எழுதி இயக்கி அஜித்குமார், த்ரிஷா, அர்ஜுன் சர்ஜா, ரெஜினா ஆகியோர் நடிப்பில் அனிருத் இசையில் வெளியாக தயாராக இருக்கிறது. அதேபோல் அஜித்குமார் நடிக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் ஆதி ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகிறது. இந்நிலையில் இந்த இரு பத்திற்கான ஒரு பரபரப்பு செய்தி வெளியாகியிருக்கிறது.

அது என்னவென்றால் விடாமுயற்சி திரைப்படம் வருகிற டிசம்பர் மாதாம் வெளியாகலாம் என்று பக்குழு அறிவித்து இருந்தது. அதேபோல் குட் பேட் அக்லி திரைப்படத்தை 2025 பொங்கலுக்கு வெளியிடப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. தற்போது வெளிவந்துள்ள செய்தி என்னவென்றால் விடாமுயற்சி திரைப்படத்தை இன்னும் மகிழ் திருமேனி கம்பிலீடாக முடிக்கவில்லையாம். அதனால் விடாமுயற்சி ரிலீஸ் ஆவது தள்ளிப் போகலாம். பொங்கலுக்கு குட் பேட் அக்லி ரிலீசான பிறகு விடாமுயற்சி வெளிவர வாய்ப்பு இருக்கிறது. அதனால் விடாமுயற்சியை குட் பேட் அக்லி ஓவர் டேக் செய்து விடலாம் என்றும் தகவல் இணையத்தில் பரவி வருகிறது.