கேரளாவில் அமீபா மூளைக்காய்ச்சலால் சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர். கோழிக்கோடு, தாமரச்சேரி பகுதியை சேர்ந்த 9வயது சிறுமி நீண்ட நாட்களாக கடும் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார். மருத்துவமனையில் சிகிக்சைப் பெற்றும் காய்ச்சல் குறையாததால், ஆய்வகத்தில் பரிசோதனை செய்ததில் சிறுமிக்கு அமீபா மூளைக்காய்ச்சல் இருப்பது தெரியவந்துள்ளது. நீண்ட நாட்களாக சிகிச்சை எடுத்தும் பலனின்றி சிறுமி இறந்துப்போனார்.
அச்சிறுமியின் 7 வயது சகோதரன் அமீபா மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். மேலும் 2பேர் அமீபா மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஓமசேரி பகுதியைச் சேர்ந்த 3 மாத குழந்தை மற்றும் 40 வயது நபர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த வாரத்தில் மட்டும் 3பேர் அமீபா மூளை காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் .மேலும் சிலர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று அச்சத்தில் கேரளா மாநிலம் இருக்கிறது.
