காரைக்காலில் அமித்ஷா என்ட்ரி.. அதிரவிட்ட “சிங்கம் ஒன்று புறப்பட்டதே” பாடல்: அதிர்ந்த புதுவை அரசியல் களம்…!!

By Soundarya on மாசி 14, 2026

Spread the love

“நல்லாட்சி தொடரட்டும் புதுவை மலரட்டும்” என்ற முழக்கத்துடன், புதுச்சேரி காரைக்கால் சந்தைத் திடலில் பாஜகவின் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் இன்று எழுச்சியுடன் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்க வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, “சிங்கம் ஒன்று புறப்பட்டதே” என்ற அதிரடியான பாடல் ஒலிக்க, தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர் . முன்னதாக, திருச்சி விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் காரைக்கால் வந்தடைந்த அவருக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அமித் ஷா, புதுச்சேரியில் கடந்த 5 ஆண்டுகளில் என்.டி.ஏ (NDA) அரசு செய்துள்ள சாதனைகளை பட்டியலிட்டு, நல்லாட்சி தொடர மக்கள் மீண்டும் ஆதரவளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, புதுச்சேரியில் பாஜக தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் இந்த முதல் தேர்தல் பொதுக்கூட்டம் திட்டமிடப்பட்டது. பாதுகாப்பு கருதி காரைக்கால் மாவட்டம் முழுவதும் ‘ட்ரோன்கள் பறக்கத் தடை செய்யப்பட்ட பகுதியாக’ (No-Fly Zone) அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.