அதிமுகவில் சசிகலா & ஓபிஎஸ் ரீ-என்ட்ரி?…. ஒரே போடாய் போட்ட டிடிவி தினகரன்…. 2026-ல் நடக்கப்போகும் அதிரடி மாற்றம்…

By Nanthini on மாசி 14, 2026

Spread the love

மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்த முக்கியத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். வரும் தேர்தலை முன்னிட்டு NDA கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் இணைய உள்ளதாக அவர் ஒரு புதிய அப்டேட்டை வழங்கியுள்ளார். குறிப்பாக, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா ஆகியோர் இந்தக் கூட்டணியில் இணைவார்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அதற்கு அவர் மிகவும் சாதுர்யமாகப் பதிலளித்தார்.

அதிமுகவின் தற்போதைய நிலை மற்றும் எதிர்காலத் திட்டம் குறித்துப் பேசிய தினகரன், “அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்றும், மீண்டும் தமிழகத்தில் அம்மாவின் பொற்கால ஆட்சி அமைய வேண்டும் என்றும் விரும்புபவர்கள் அனைவரும் நிச்சயம் ஒரு குடையின் கீழ் இருப்பார்கள்” என்று சூசகமாகத் தெரிவித்தார். நேரடியாகப் பெயர்களைக் குறிப்பிடவில்லை என்றாலும், பிரிந்து கிடக்கும் அதிமுகவின் முக்கிய முகங்கள் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதை அவரது பேச்சு உறுதிப்படுத்துவது போல் அமைந்துள்ளது. இது தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.