அண்ணாமலையை பத்தி பேசக்கூடாது… தமிழிசையை கறாராகக் கடிந்து கொண்ட அமித்ஷா… பாஜகவில் வெடித்த பரபரப்பு..!!

Spread the love

அண்ணாமலையைப் பற்றிப் பேசக்கூடாது என பாஜகவினருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், அண்ணாமலையை விமர்சித்துப் பேசியிருந்த விவகாரம் பெரும் விவாதப் பொருளாக மாறியது. இது குறித்துப் பேசியுள்ள அமித்ஷா, அண்ணாமலை தனது சொந்த வழியில் செல்லட்டும் என்றும், பாஜகவிலிருந்து விலகியவர்களின் அரசியல் வாழ்க்கைதான் முடிந்திருக்கிறதே தவிர, அதனால் கட்சிக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்றும் தங்களது நிர்வாகிகளிடம் கறாராகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த விவகாரத்தில் தமிழக பாஜகவின் மாநிலத் தலைவரே அமைதி காக்கும் போது, நீங்கள் ஏன் தேவையற்ற விமர்சனங்களை முன்வைக்கிறீர்கள் என்று தமிழிசையை அமித்ஷா கடிந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த அதிரடி உத்தரவின் மூலம் தமிழக பாஜகவிற்குள் நீடித்து வந்த உட்கட்சிப் பூசல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க அமித்ஷா முயன்றுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அமித்ஷாவின் இந்த திடீர் எச்சரிக்கை மற்றும் அறிவுறுத்தல், தற்போதைய தமிழக பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Soundarya

Recent Posts

நான் திருநங்கையா..? எல்லோரும் அப்படித்தான் சொல்றாங்க.. நடிகை குஷ்புவின் மகள் அனந்திதா வேதனை..!!

பிரபல நடிகை குஷ்புவின் மகள் அனந்திதா, தான் உடல் எடையைக் குறைத்த பிறகு சமூக வலைதளங்களில் தன்னை 'திருநங்கை போல்…

4 minutes ago

ஏற்கனவே 2 மனைவிகள், 3 பிள்ளைகள்.. 45 வயது ஆசாமியிடம் சிக்கிய 15 வயது சிறுமி.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்.. திடுக்கிடும் பின்னணி..!!

காஞ்சிபுரம் மாவட்டம் மல்லிகாபுரம் கிராமத்தில் கடந்த 13-ஆம் தேதி புனித அந்தோணியார் ஆலயத் தேர் திருவிழாநடைபெற்றது. இந்த திருவிழாவை பார்க்க…

8 minutes ago

தூத்துக்குடியில் நள்ளிரவில் பயங்கரம்..! விசாரணைக்குச் சென்ற எஸ்.ஐ மற்றும் காவலருக்கு அரிவாள் வெட்டு… சிறுவன் உட்பட 3 பேர் கைது..!!

தூத்துக்குடி நேரு காலனி பகுதியில் தொழிலாளி ஒருவரின் வீட்டின் மீது மர்ம நபர்கள் மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டிலைத் தீயிட்டு வீசிவிட்டுத்…

14 minutes ago

சென்னையில் முதியவர்களுக்கு குட் நியூஸ்… ஜூன் 21 முதல் இலவச பேருந்து டோக்கன் விநியோகம்… என்னென்ன ஆவணங்கள் தேவை தெரியுமா…? முழு விவரம் உள்ளே…!!

தமிழக அரசின் சார்பில் மூத்த குடிமக்கள் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் வகையில், ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் ஒருமுறை இலவச…

15 minutes ago

பிறந்து 56 நாட்களே ஆன குழந்தையை தூங்க வைக்க பேன் போட்ட தந்தை… அடுத்த நொடியே துடிதுடித்து பலி… பெரும் சோகம்..!!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே, பிறந்து 56 நாட்களே ஆன தனது குழந்தையைத் தூங்க வைப்பதற்காக மின்விசிறியைப் போட்ட தந்தை…

23 minutes ago

“சட்டமன்றத்திற்குள் நுழைந்த ‘குட்டி TVK’.. பெண் MLA-க்கள் செய்த செயலால் நெகிழ்ந்துபோன கோட்டை”..!!

தமிழ்நாட்டின் 17-வது சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர், ஜூன் 18, 2026 அன்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்களின் உரையுடன்…

23 minutes ago