தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் நடிகை அமலாபால். இவர் 2009 ஆம் ஆண்டு நீலதாமரா என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
2010 ஆம் ஆண்டு சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் நுழைந்தார். அடுத்ததாக நடித்த மைனா திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வந்த நிலையில் இவர் ஏஎல் விஜயை காதலித்து 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
பிறகு கருத்து வேறுபாடு காரணமாக 2016 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார். பின்னர் விவாகரத்து பெற்ற நிலையில் பால் ஜகத் தேசாய் என்பவரை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிக்கு கடந்த ஜூன் 11ஆம் தேதி அழகிய ஆண் குழந்தை பிறந்தது. தங்கள் குழந்தைக்கு இலை என்று பெயரிட்டுள்ளனர்.
இந்த நிலையில் தாங்கள் இருவரும் சந்தித்து ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு அமலா பால் தனது கணவருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
கையில் குழந்தையுடன் ஒரு போட்டோவில் அமலா பால் இருக்கின்றார். அதேசமயம் தனது கணவருக்கு லிப்லாக் கிஸ் கொடுத்து தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார். அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.