கவுண்டமணி ஏன் Interview கொடுக்கிறதில்லை… கேள்வி கேட்டு வாங்கி கட்டி கொண்ட சத்யராஜ்…

By admin on ஆவணி 13, 2024

Spread the love

கோயம்புத்தூரில் பிறந்து வளர்ந்தவர் கவுண்டமணி. இவரின் இயற்பெயர் சுப்பிரமணியன் கருப்பையா என்பதாகும். இவர் தமிழ் சினிமாவில் பணியாற்றும் பிரபல நகைச்சுவை நடிகர் ஆவார். தமிழ் சினிமாவின் நகைச்சுவை மன்னன் என்று அழைக்கப்பட்டவர் கவுண்டமணி. 1980கள் 90களில் உச்சபட்ச நகைச்சுவை நடிகராக பிரபலமாகவும் புகழின் உச்சத்திலும் இருந்தவர். கவுண்டமணி செந்தில் இரட்டையர் செய்த நகைச்சுவை காட்சிகள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.

ஆரம்பத்தில் நாடகத்தில் நடிக்க தொடங்கிய கவுண்டமணி நாகேஷ் நடித்த சர்வர் சுந்தரம் திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் தோன்றி திரையுலகில் அறிமுகமானவர் கவுண்டமணி. 16 வயதினிலே திரைப்படத்தின் மூலம் முழு நீள கதாபாத்திரத்தில் கவுண்டமணி தோன்றினார். நக்கல் காமெடி பண்ணுவதில் கவுண்டமணி வல்லவர்.

   

   

கிட்டத்தட்ட 40 வருடமாக நகைச்சுவையில் உச்சபட்ச பிரபலமாக இருந்தவர் கவுண்டமணி ஆவார். 1980கள் 90களில் கவுண்டமணி செந்தில் இல்லாத படங்களே இல்லை என்று சொல்லலாம். அப்படி எல்லா படத்திலும் கவுண்டமணி செந்தில் இருப்பர். இவரின் பிரபல வசனமான ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’, ‘கொசு தொல்லை தாங்க முடியல’ போன்றவை பிரபலம் ஆனது.

 

நக்கலாக பேசுவது அவரது முக பாவனைகள் பார்ப்போருக்கு எளிதாக நகைச்சுவை உணர்வை தூண்டும். தொழில் வாழ்க்கையில் உச்சத்தில் இருந்த கவுண்டமணி அவர்களை பற்றிய தனிப்பட்ட வாழ்க்கை ஏதும் பெரிதாக வெளியில் தெரியவில்லை. இதற்கு காரணம் கவுண்டமணி எந்த ஒரு நேர்காணலிலும் கலந்து கொள்ள மாட்டார். இன்டர்வியூ கொடுத்ததில்லை.

இதைப் பற்றி ஒரு முறை சத்யராஜ் பகிர்ந்து கொண்ட போது, சத்யராஜ் ஒருமுறை கவுண்டமணி அவர்களிடம் ஏன் அண்ணே, இன்டர்வியூ எல்லாம் கொடுக்கலாம்ல எப்பவுமே கொடுக்க மாட்டேன்றீங்க அப்படின்னு கேட்டதுக்கு முகத்தில் அடித்தார் போல் கவுண்டமணி பதில் கூறியிருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால், நான் படத்துல நடிக்கிறேன் மக்கள் என்ன படத்துல தியேட்டர்ல வந்து பாக்கட்டும். என்ன பிடிச்சிருந்தா பாக்கட்டும் புடிக்கலைன்னா போகட்டும் இத தாண்டி என்ன பத்தி தெரிஞ்சுக்கிறதுக்கு அவங்களுக்கு என்ன இருக்கு என்று கூறியுள்ளார் கவுண்டமணி. சத்யராஜ் ஏன்டா இந்த கேள்வியை கேட்டோம் என்று நினைத்துக் கொண்டு அமைதியாக சென்று விட்டாராம்.