இன்றைய காலகட்டத்தில் செல்போன் பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே செல்போன் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். செல்போன் இல்லாமல் வாழ்க்கையே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. அந்த அளவிற்கு செல்போனின் முக்கியத்துவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதே தவிர குறைந்த பாடில்லை. இதன் காரணமாக நாளுக்கு நாள் ஸ்மார்ட் போன் நிறுவனங்கள் வித்தியாசமான வடிவங்களில் தங்களுடைய உற்பத்திகளை அறிமுகப்படுத்தி வருகின்றன.

அது மட்டுமல்லாமல் அழகான வண்ணமயமான வடிவங்களில் போன் கவர் அடிக்கடி வெளியாகிய வண்ணம் உள்ளது. தனித்துவமாகவும் நாகரிகமாகவும் தோற்றமளிக்க வேண்டும் என்பதற்காக பலரும் விசித்திரமான மொபைல் அவர்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுகிறார்கள். அதிலும் பெரும்பாலான பெண்கள் தங்களுடைய போன் கவர்களை பணம் வைக்கும் இடமாக பயன்படுத்தி வருகிறார்கள்.

ஆனால் தற்போது பெண் ஒருவர் விசித்திரமான முறையில் பயன்படுத்தும் போன் கவர் குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோ வெளியாகி பலருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்தப் பெண் தன்னுடைய போன் கவரில் உயிர் உள்ள எறும்புகளை அலங்காரத்திற்காக வைத்துள்ளார். அந்த வீடியோ வைரல் ஆகி வரும் நிலையில் இதனைப் பார்த்த பலரும் பாவம் அதை ஏன் வச்சு கொடுமை படுத்துறிங்க வெளியில விடலாம் இல்ல என்று கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
