என் மகள் கனடாவுலயே பெரிய டிரம்ஸ் பிளேயர்…! வேற லெவலில் டிரம்ஸ் வாசித்து அசத்தும் ஆல்யா- சஞ்சீவின் மகள் ஐலா…!

By Begam on புரட்டாதி 27, 2023

Spread the love

சின்னத்திரையில் ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியல் நடிகைகளில் ஒருவர் ஆல்யா மானசா. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ராஜா ராணி’ சீரியல் மூலம் ரசிகர்களிடையே அறிமுகமானார். முதல் சீரியலே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றதால் பிரபலமான சீரியல் நடிகையாக மாறினார்.

   

இதே சீரியலில் ஹீரோவாக நடித்து வந்த சஞ்சீவ்வை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். நட்சத்திர ஜோடியாக வலம் வரும் இவர்களுக்கு அய்லா சையத் என்ற பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து ‘ராஜா ராணி 2’ சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இதைத்தொடர்ந்து இரண்டாவது முறையாக கர்ப்பமானதால் சீரியலில் இருந்து விலகினார். இவர்களுக்கு இரண்டாவது ஆண் குழந்தை பிறந்தது.

   

 

மீண்டும் ஆல்யா, எப்போது நடிப்பால் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். தற்பொழுது இவர் தனது உடல் எடையை வெகுவாக குறித்து தனது செகண்ட் இன்னிங்ஸ் தொடங்கியுள்ளார். இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘இனியா’ சீரியலில் ஹீரோயினாக நடித்து அசத்தி வருகிறார். இத்தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது.

நடிகர் சஞ்சீவ் இதே சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை ஆலியா. இவர்  தற்பொழுது தனது மகள் ஐலா ட்ரம்ஸ் வாசிக்கும் வீடியோ ஒன்றை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடீயோவை பார்த்த  ரசிகர்களும் ஐலாவை பாராட்டி வருகின்றனர். இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by alya_manasa (@alya_manasa)