இதை use பண்ணுனீங்கன்னா முதுமையே வராதாம்…! புது பிசினஸ் தொடங்கிய நடிகை நயன்தாராவின் first product…! வைரல்…!

By Begam on புரட்டாதி 27, 2023

Spread the love

தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா. நடிகர்களுக்கு இணையாக சம்பளம் பெறும் ஸ்டார் நடிகையாக பலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் இறுதியாக ஷாருக்கானின் ஜவான் திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.

   

இந்த படத்தின் பிரமோஷனுக்காக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் நயன்தாரா கணக்கு தொடங்கிய நிலையில் பல புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய தொழிலை தொடங்கப் போவதாக சமீபத்தில்  அறிவித்திருந்தார். இவரின் இந்த பதிவானது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி  இருந்தது.

   

 

நடிகை நயன்தாரா ஏற்கனவே Lip Balm Company என்று லிப்ஸ்டிக் பொருளை விற்பனை செய்யும் தொழிலை செய்து வருகிறார். தற்பொழுது தனது அழகு சாதன பிஸ்னஸில் அடுத்தபடியாக அடுத்த கட்டத்தில் இறங்கி இருக்கும் நயன்தாரா தற்போது சரும பிராடக்டுகளில் இறங்கி இருக்கிறார். இதற்காக அவர் 9skin என்ற அடுத்த நிறுவனத்தை தற்பொழுது தொடங்கி உள்ளார். இதில் சருமத்திற்கு தேவையான அழுகு சாதன பொருட்களை விற்பனை செய்ய இருப்பதாகவும், மேலும், இந்த நிறுவனத்தை வரும் 29ஆம் தேதி துவங்க இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

 

View this post on Instagram

 

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

இந்நிலையில் நடிகை நயன்தாரா தனது first product ஒன்றை இணையத்தில் அறிமுகம் செய்துள்ளார். அந்த பதிவில் ‘Introducing Eternelle, the Anti-Aging Serum. Reduce fine lines, wrinkles and dark spots as time stands still with Eternelle. Get your hands on this luxurious formula featuring the wonders of Vetiver, Ginko Biloba and Gotu Kola’ என்றும் குறிப்பிட்டுள்ளார். தற்பொழுது இப்பதிவானது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by 9 S K I N (@9skinofficial)