தமிழ் சினிமா இயக்குனர்கள் பலரும் பாலிவுட்டில் முன்னணி நடிகர்களை வைத்து படங்களை எடுத்தாலும் மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் ஹிட் கொடுக்க முடியாமல் திணறி வருகிறார்கள். தெலுங்கில் ராம் சரணை வைத்து கேம் சேஞ்சர் படத்தை கொடுத்த இயக்குனர் சங்கரால் கூட ரசிகர்களை கவரும் வகையில் படத்தை எடுக்க முடியவில்லை. ஆனால் பாலிவுட்டுக்குச் சென்று ஷாருக்கான் வைத்து ஜவான் படத்தை இயக்கி சுமார் 1100 கோடி வசூல் சாதனையை அட்லீ அசால்ட் ஆக செய்தார். ராஜமவுலி, பிரசாந்த் நீல் மற்றும் சுகுமார் வரிசையில் இந்தியாவின் மோஸ்ட் வான்டெட் இயக்குனராக மாறியுள்ள அட்லி அடுத்ததாக அல்லு அர்ஜுனை வைத்து படமெடுக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

புஷ்பா 2 படத்தின் வெற்றியை கூட சந்தோஷமாக கொண்டாட முடியாமல் சிறைச்சாலைக்கு அல்லு அர்ஜுன் சென்று வந்த நிலையில் அவரது குடும்பத்தினர் ஜோசியம் பார்த்ததாகவும் அதன் காரணமாக கூடிய விரைவில் அல்லு அர்ஜுன் தன்னுடைய பெயரில் மாற்றத்தை கொண்டு வரப் போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அல்லு அர்ஜுனின் அடுத்த படத்தை அட்லீ இயக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் இந்தப் படத்தில் அல்லு அர்ஜுன் அண்ணன் மற்றும் தம்பி என இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது

இருந்தாலும் அல்லு அர்ஜுன் திரைப்படத்தை அட்லீ இயக்கப் போகிறார் என்று இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. அதே சமயம் அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் இந்த படத்தில் பிரியங்கா சோப்ராவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் அவருக்கான கால் சூட் மற்றும் சம்பள விவரம் குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
