புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனையில், நீண்ட காலமாக நிலவி வரும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை தற்போது பெரும் பொதுமக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய மருத்துவப் பணியாளர்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும், இதுவரை முறையான தீர்வு காணப்படவில்லை என்ற குற்றச்சாட்டு வலுவாக எழுந்துள்ளது. இத்தகைய கட்டமைப்புப் பற்றாக்குறையே, அங்கு தொடர்ச்சியாக அரங்கேறும் சர்ச்சைக்குரிய நிகழ்வுகளுக்கு முதன்மைக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த ஐந்தாம் தேதி இரவு நெஞ்சு வலி காரணமாக நோயாளி ஒருவர் அவசர சிகிச்சைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அப்போது இரவு நேரப் பணியில் இரண்டு செவிலியர்கள் மட்டுமே இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், மருத்துவமனையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ரஞ்சித் என்ற காவலாளி, அந்த நோயாளிக்கு இசிஜி பரிசோதனை மேற்கொள்வது போன்றும், அதன் பதிவுகளை எடுப்பது போன்றும் இருக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு, இதே மருத்துவமனையில் சமையல் பணியில் இருந்த பெண் ஒருவர் காயமடைந்த நோயாளிக்கு தையல் போட்ட காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது காவலாளி இசிஜி எடுத்த விவகாரம் மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்த விவகாரம் காட்டுத்தீயாய் பரவியதைத் தொடர்ந்து, மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், இசிஜி பரிசோதனையை அங்கு பணியில் இருந்த செவிலியரே மேற்கொண்டார் என்றும், இரவு நேர பணிச்சுமை அதிகமாக இருந்ததன் காரணமாக அவருக்கு உதவியாக மட்டுமே காவலாளி அருகில் நின்றாரே தவிர, அவராக நேரடியாக இசிஜி பரிசோதனையை மேற்கொள்ளவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பொதுமக்களின் உயிரோடு விளையாடும் இத்தகைய சம்பவங்கள் தொடர்வதைத் தடுக்க, தமிழக அரசு உடனடியாக தலையிட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனைக்குத் தேவையான கூடுதல் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை நியமிக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்தப் பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
சேலம் அயோத்தியாபட்டணம் அருகே உள்ள மேட்டுப்பட்டி தாதனூரைச் சேர்ந்தவர் தங்கமணி (50). சங்கர் நகர் பகுதியில் வீடுகளுக்குச் சென்று வீட்டு…
நேற்றைய அன்பின் பிணைப்புகள் இன்று அறுபட்டு, கணவன்-மனைவி மற்றும் குடும்ப உறவுகள் உச்சக்கட்ட மோதலாக மாறியுள்ளன. தூய்மையற்ற ரத்தம் என்ற…
சூரத்தில் தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுமி, ஈகோ வேன் மோதியதில் வாகனத்தின் அடியில் விழுந்தாள். எதிர்பாராத…
பார்ப்பேட்டா பகுதியில் காதலுக்காகத் துணிச்சலான முடிவெடுத்த ஒரு பெண்ணின் கதை தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகக்…
அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள நௌகவான் சாதத் காவல் நிலையப் பகுதியில் விசித்திரமான ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள ஒரு இளைஞனும்…
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆ.சங்கம்பாளையத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி, பொள்ளாச்சி அரசு கலைக் கல்லூரியில் பிகாம்…