Categories: சினிமா

அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தின் முதல் ஹீரோ நான்தான் – ஆச்சரிய தகவலை பகிர்ந்துகொண்ட பிரபல காமெடி நடிகர்

Spread the love

வடிவேலுவுடன் பல நகைச்சுவை காட்சிகளில் நடித்தவர் பாவா லட்சுமணன். பல காமெடி காட்சிகளில் இவரது நடிப்பு ரசிகர்கள் பலரையும் ரசிக்க வைத்தது. ஒரு கட்டத்திற்குப் பிறகு வடிவேலுவுடன் இணைந்து இவர் நடிக்கவே இல்லை. சமீபத்தில் கூட உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டு வந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய பாவா லட்சுமணன், தான் கடந்து வந்த பாதையை குறித்து பகிர்ந்துகொண்டார். அப்போது “அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தின் ஹீரோவாக நடிக்க என்னை ஒரு சினிமாக்காரர் அழைத்துச் சென்றார். அங்கே பாரதிராஜாவின் சகோதரரை சந்தித்தோம்.

அவர் எங்களை பாரதிராஜாவிடம் அழைத்துச் சென்றார். பாரதிராஜா என்னை மேலும் கீழுமாக பார்த்தார். ‘ரெண்டு வருஷம் கழிச்சி கூப்புட்டு வாங்க’ என்று பாரதிராஜா கூறிவிட்டார். அதன் பின் ஒரு நாள் பாரதிராஜா ரோட்டில் சென்றுகொண்டிருந்தபோது ஒரு பந்து அவரது காரின் மேல் பறந்து வந்து விழுந்திருக்கிறது.

அந்த பந்தை எடுக்க ஒரு பையன் வந்தார். அந்த பையன் யார் என்று பாரதிராஜா கேட்டபோது அது நடிகர் முத்துராமனின் பையன் என்று கூறினார்கள். அவ்வாறுதான் கார்த்திக் அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தில் நடித்தார்” என்று கூறினார்.

அதன் பின் இயக்குனர் விக்ரமனிடம் பணியாற்றினார் பாவா லட்சுமணன். அந்த சமயத்தில் விக்ரமன் தன்னை சொந்த தம்பி போல் பார்த்துக்கொண்டதாக நெகிழ்ச்சியோடு பகிர்ந்துகொண்டார்.

Arun

Recent Posts

பேசினது ஒரு குத்தமா?… நொடியில் மாறிய முகம்… கொடூர ரத்த வெறி… நண்பனை பலிவாங்கிய கோடாரி… துடிதுடிக்க நடந்த பகீர் கொலை…!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள திட்டங்குளம் பகுதியில் செயல்பட்டு வரும் தினசரி சந்தையில் காளிராஜ் என்பவர் சுமை தூக்கும் தொழிலாளியாகப்…

6 minutes ago

விவசாயியின் பலே யோசனை!… இனி யாருடைய கண்ணும் படாது… மிளகாய் தோட்டத்தில் ராஷ்மிகா மந்தனா?… பார்த்ததும் வாயடைத்துப் போன ஊர் மக்கள்…!!

பொதுவாகப் பயிர்கள் செழித்து வளரும் விவசாய நிலங்களில் மனிதர்களின் கண் திருஷ்டி படாமல் இருப்பதற்காக சோளக்காட்டு பொம்மைகள், பழைய காலணிகள்…

13 minutes ago

திக் திக் நிமிடங்கள்..! அதிர்ஷ்டம்னா இதுதான்… சுற்றிலும் சூழ்ந்த வெள்ளம்… ஆற்றில் பாய்ந்த கார்… நொடிப் பொழுதில் ஆடிய மரண ஆட்டம்…!!

சென்னையைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் வைத்தீஸ்வரன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, காரில் மீண்டும் சென்னை நோக்கிப் புறப்பட்டனர். புதுச்சேரி…

20 minutes ago

மீண்டும் பயங்கரம்..! தப்பியோட முயன்ற காமக்கொடூரன்… மார்பில் பாய்ந்த தோட்டா… அடுத்தடுத்து அதிரடி காட்டும் என்கவுன்ட்டர் போலீஸ்…!!

மேற்கு வங்காள மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம் கைகாடா பகுதியில் இசை நிகழ்ச்சிக்குச் சென்ற 17 வயது சிறுமி…

28 minutes ago

“அய்யோ என்னாச்சு!”… 1 நொடி கவனக்குறைவு… பால்கனியில் நின்ற முதியவர்… ஒரு துளி எச்சில்… பறிபோன உயிர்… நெஞ்சை பதறவைக்கும் விபரீதம்…!!

மத்தியப் பிரதேசத்தின் விதிஷா மாவட்டம், கஞ்ச்பசோதா பகுதிக்குட்பட்ட 6-வது வார்டில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுவந்த 60 வயது முதியவர் ஒருவர்…

40 minutes ago

அதிர்ச்சி..! 17 கைதிகள் எஸ்கேப்… சினிமா பட பாணியில் ஜெயில் பிரேக்… கதறிய சிறைத்துறை… அடுத்த நொடியே பறந்த அதிரடி உத்தரவு…!!

சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த 17 விசாரணைக்கைதிகள் திடீரென தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பையும், பாதுகாப்பு ஏற்பாடுகள் மீதான கேள்விகளையும் எழுப்பியுள்ளது.…

48 minutes ago