நடிகர் அஜித் பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கான் இணைந்து ஒரு ஹிந்தி திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்துக்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது சொல்லி தான் தெரிய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. டாப் 10 நடிகர்களில் ஒருவராக வளம் வரும் நடிகர் அஜித். தற்போது விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்தை லைக்கா ப்ரொடக்ஷன் தயாரித்திருக்கின்றது.

கிட்டதட்ட ஒன்றரை வருடங்களாக இந்த திரைப்படத்தை ஜவ்வு போல் இழுத்து எடுத்து வருகிறார்கள். நடிகர் அஜித் கடைசியாக நடித்த திரைப்படம் துணிவு. இந்த திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றதைத் தொடர்ந்து விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். விரைவில் படத்தின் படப்பிடிப்பு முடிந்து வருகிற தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதைத் தொடர்ந்து அஜித் ஆதித் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படி சினிமாவில் தொடர்ந்து பிஸியாக நடித்து வரும் நடிகர் அஜித் கார் ரேஸ் மற்றும் பைக் ரேஸ் மீது அதிக ஆர்வம் கொண்டவர். அவ்வபோது பைக் எடுத்துக் கொண்டு டூர் என்று கிளம்பி விடுவார். இந்நிலையில் தற்போது அஜித்தின் ஒரு புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தனது twitter பக்கத்தில் இந்த வீடியோவை பல மாதங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தது. அதில் நடிகர் அஜித் பாலிவுட் திரைப்படத்தில் நடித்தது போன்ற காட்சி இடம்பெற்று இருக்கின்றது. நடிகர் அஜித் நடித்த ஒரே ஹிந்தி திரைப்படம் இது மட்டும்தான், ஷாருக்கானுடன் அவர் இணைந்த அசோகா படம் தான். அது இதைப் பார்த்து ரசிகர்கள் பலரும் நம்ம அஜித்தா இது என்று ஆச்சரியத்துடன் பார்த்து வருகிறார்கள்.

2001 ஆம் ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் உருவான திரைப்படம் அசோகா அஜித் அவரது அண்ணனாக சுஷிமா மயூரா என்கின்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதை தொடர்ந்து பல வருடங்களுக்குப் பிறகு இங்கிலீஷ் விங்கிலீஷ் என்ற திரைப்படத்தில் ஸ்ரீதேவியுடன் ஒரு கெஸ்ட் ரோலில் அஜித் நடித்திருப்பார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
