மதுரையில் எளிமையாக நடந்த இயக்குனர் அமீர் மகள் திருமணம்.. ஒன்று திரண்ட திரை பிரபலங்கள்.. வைரல் புகைப்படங்கள்..!

By Mahalakshmi on ஜூன் 24, 2024

Spread the love

இயக்குனரும், நடிகருமான அமீர் மகள் நிஷாவின் திருமண விழாவிற்கு ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் தனது திரைப்படத்தால் மிகப்பெரிய பேரும் புகழையும் பெற்றவர் அமீர். பருத்திவீரன் திரைப்படத்தின் மூலமாக மிகவும் பிரபலமான இவர் தற்போது பல திரைப்படங்களில் நடித்து அசத்தி வருகின்றார். மதுரையில் பிறந்து வளர்ந்த இவர் பொறியியல் படிப்பை முடித்து இருக்கின்றார். ஆரம்பத்தில் இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார்.

   

   

பின்னர் பாலா இயக்கத்தின் வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படங்களான சேது மற்றும் நந்தா உள்ளிட்ட திரைப்படங்களில் பணியாற்றியிருக்கின்றார். 2002 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். முதல் படமே இவருக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது. அதன் பிறகு ராம், பருத்திவீரன், ஆதி பகவன், பேரன்பு உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியிருக்கின்றார்.

 

இவரின் திரைப்படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. படங்களை இயக்குவது மட்டுமில்லாமல் சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தையும் வைத்திருக்கின்றார், இயக்கம் மூலமாக பிரபலமான அமீர் வடசென்னை திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து நடிகராகவும் பிரபலமானார்.

இந்நிலையில் நேற்று இவருடைய மகள் அனி நிஷாவின் திருமணம் மதுரையில் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்று முடிந்தது. மதுரையில் கருப்பாயூரணி என்ற பகுதியில் இருக்கும் மண்டபத்தில் திருமணம் நடைபெற்று வந்தது. இந்த திருமண விழாவில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குனர்களான வெற்றிமாறன், சசிகுமார், சேரன், சமுத்திரகனி, சரவணன், கருப்பழனியப்பன், எஸ் ஆர் பிரபாகரன், சுப்ரமணியன் சிவா நடிகர் ஆர்யா, பொன்வண்ணன், கஞ்சா கருப்பு பாடல் ஆசிரியர் சினேகன் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.

திருமண விழாவிற்கு வந்த அனைவரையும் அன்போடு வரவேற்றார் அமீர், திருமணம் மேடையில் மணமகன் மற்றும் மணமகளிடம் சம்மதம் கேட்டு திருமணம் நடைபெற்றது. இதையடுத்து பல பிரபலங்கள் மணமக்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டனர். அது மட்டும் இல்லாமல் திருமணத்திற்கு வந்தவர்கள் அனைவரிடமும் எந்த ஒரு பரிசு பொருளையும், மொய் பணத்தையும் கொண்டுவரக் கூடாது என்பதை கூறி இருக்கின்றார் அமீர். தற்போது அமீரின் மகள் திருமண புகைப்படங்கள் தான் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.